Header Ads



கோத்தபாயவின் பக்கம் சாய்வதற்கு, அதாவுல்லா முடிவு...??

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் கொழும்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி கிழக்குவாசலில் நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானத்துக்கு அமைவாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நாட்டின் இஸ்திர தன்மையை உருவாக்க  மேற்கொள்ளவேண்டிய விடயங்கள், பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், சகல இன மக்களும் நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய அவசியம் தொடர்பில் ஆராயபட்டது. 

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் போராளிகள் யாரும் ஐ.தே. கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை அவருடன் சேர்ந்து பயணிப்பதில்லை அவரது வாகனத்தில் ஏற வேண்டிய தேவை அஷ்ரபின் போராளிகளுக்கு இல்லை என்றும். கடந்த கால தேர்தல்களில் நாம் முன்வைத்த பயங்கரவாதத்தை முடித்தல், வடக்கு கிழக்கை பிரித்தல் போன்ற ஒப்பந்தங்களை போன்று இம்முறையும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட திட்டங்களை முன்வைத்து தீர்மானங்களை மேற்கொள்ள தலைமைத்துவ சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 

எல்லா இனங்களும் நிம்மதியாக வாழக்கூடிய தீர்வை முன்னிறுத்தி இணக்கப்பட்டுடன் பயணிக்க கூடியதாக புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் யாப்பை விரிவாக ஆராய்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தலைமைத்துவ சபைக்கு மீயுயர் சபை வழங்கியது. 

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்துவந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் நாட்டினதும், மக்களினதும் நலனில் அக்கறை கொண்டு தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் தே. காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட வரலாறு நடைபெற்றது. 

ஏற்கனவே எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்புடன் பேசி, ஆராய்ந்து தீர்மானத்தை நிறைவேற்ற தலைமைத்துவ சபை பணிக்கப்பட்டு நேற்றைய கூட்ட முடிவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

நூறுல் ஹுதா உமர். 

9 comments:

  1. கழுதை கெட்டால் குட்டிச்சுவர்!

    ReplyDelete
  2. you have personnel dispute with Ranil, so don't mislead muslim, any way he will disqualify in the match

    ReplyDelete
  3. அதாவுல்லா அவர்களே, முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமை போராட்ட பயணத்தில், ஒற்றுமையில், நீங்கள் ஒரு கொடரிக்காம்பு. அக்கரைப்பற்று மக்கள் மாற்று அரசியல் பிரநிதியை பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் அரசியல் செய்து உங்களை பலப்படுத்திக்கொண்டது போதும். உங்கள் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் உரிமை போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள். ராஜபக்ச அன் கோ ( விசேடமாக கோத்தபாய ) மிகப் பெரும் முஸ்லிம் இன விரோதிகள், கடந்த அவர்களது ஆட்சி காலத்தில் தான் இந்த இனவாதிகள் உரம் போட்டு வளர்க்கப்பட்டார்கள், நீங்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தீர்கள். போதும் அரியாசனை ஆசை.

    ReplyDelete
  4. இது எல்லோரும் எதிர்பார்த்த முடிவுதான். அக்கரைப்பற்றில் இருந்து குறுநில மன்னரால் கோதாவுக்கு கொஞ்ச வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

    ReplyDelete
  5. AFTER HIS SUPPORTING HE WILL WIN DEFINITELY

    ReplyDelete
  6. இவர் சஜித்தை தோற்கடிக்க வேண்டுமெண்டால், சஜிதிக்குத்தானே சப்போர்ட் பண்ண வேண்டும்

    ReplyDelete
  7. உண்மையில் வரவேற்கத்தக்க நல்ல முடிவு.

    ReplyDelete
  8. Athaulla should realize the current ground situation...leader would have said something considering the status quo at that time.many leaders have changed their status and inclinations later on.atha won't to create another walawuwa dynasty with his family same NR is grooming...

    ReplyDelete

Powered by Blogger.