Header Ads



கபீர் - கிரியெல்ல வாய் தர்க்கத்தை, தடுத்துநிறுத்திய ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று -06- இடம்பெற்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அடுத்து அமைச்சர் கபீர் ஹாசிம் அங்கிருந்து இடையில் வெளியேறிச் சென்றுள்ளார்.

பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசிம் மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதனையடுத்து பேச்சுவார்த்தை முடியும் முன்னரே அமைச்சர் கபீர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு எதிராக செயற்படுவார்கள் என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் கிரியெல்ல, அமைச்சர் கபீர் ஹாசிடம் கூறியுள்ளார். பிரதமர் தனக்கு பரிந்துரைத்த துறைகளை வழங்க வேண்டாம் என கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசிம் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள கிரியெல்ல,

கட்சியின் தலைமை எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்றத்தில் செயற்பட முடியாது என்றால், நான் சபை முதல்வர் பதவியில் இருந்து விலகியிருப்பேன்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராக பதவி வகித்து கொண்டு அமைச்சர் கபீர் ஹாசிம், கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளார். தனது மாவட்டத்தில் கூட வெற்றி பெற முடியாத அவரது செயற்பாடுகளை நான் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தலையிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனைத்துக்கும் முதல் கட்சியின் கட்டுப்பாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. இதைத்தான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுதல் என்பர்

    ReplyDelete
  2. இது தான் கபீரின் நிலைப்பாடு, யூ.என்.பீயைப் பிரித்தாளும் திட்டத்தின் மூலகர்த்தாவான மஹிந்தவின் ஏற்பாட்டின் படி சனாதிபதி கபீரையும் எரனையும் பயமுறுத்தி சிறையில் போடுவதாக அச்சுறுத்தி, அவ்வாறு மத்திய வங்கி கொள்ளையிலிருந்து நீங்கள் இருவரும் காப்பாற்றப்படவேண்டும் என்றால் அரசாங்கத்தின் சாட்சிகளாக மாறவேண்டும் ரணிலுக்கு ஒரு வெட்டுபோடவேண்டும் என்ற மஹிந்தவின் சூழ்ச்சியை மைத்திரி மூலம் விழுங்கி அந்த இருவரும் இப்போது ரணிலுக்கு விரோதமாக செயல்படத் தொடங்கியுள்ளார்கள். ரணிலைச் சிறையில் தள்ளுவதாக மைத்திரி இவர்கள் இருவரிடமும் கூறியதைக்கேட்டு பயந்துபோய் இந்த கபீரும் எரன் விக்ரமசிங்காவும் இப்போது யூ என் பீக்கு விரோதமாக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இறுதி விளைவு இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து விரட்டப்படுவார்கள். அவ்வளவு தான் மிச்சம். இறுதியில் சூழ்ச்சியில் மாட்டி கட்சியுமில்லை, பதவியுமில்லை. அவ்வளவுதான். மஹிந்தவின் கோத்தாவின் நாடகத்தை மைத்திரி சிறப்பாக செயல்படுத்துகின்றார். இலங்கையின் அரசியல் சாக்கடை என்பதற்கு வேறும் உதாரணங்கள் தேவையா?

    ReplyDelete

Powered by Blogger.