September 03, 2019

ரணிலை சிறையில், அடைப்பாரா மைத்திரி

“இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும். முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விட, இன்னும் பெரியவர்களை தண்டிக்க குற்றப்பத்திரம் தயாராகி விட்டதாக அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் 68வது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

2020ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும். 2020 இல் பிரதமரே அதிகாரம் மிக்கவர், அதனால் ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசாங்கம் அமைக்கப்படும் என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 வது ஆண்டு விழா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (03) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

“தீர்ப்பு சரியான பக்கத்திற்கு” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற மாநாட்டில் நாடளாவிய ரீதியில் வருகை தந்த ஏராளமான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு விழா சஞ்சிகை மற்றும் கட்சியின் எதிர்கால கொள்கைத் தொடரும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

கட்சி உறுப்பினர்களுக்கான காப்புறுதி திட்டம் வழங்கப்படுவதை ஜனாதிபதி அடையாளப்படுத்தி வைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா, டி.எம்.ஜயரட்ன, பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கட்சி தரலைவர்கள் உள்ளிட்ட இணையமைப்பின் தலைவர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், கல்விமான்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒரு அரசாங்கம் என்ற பெருமையை ஸ்ரீ.ல.சு.க. கொண்டுள்ளது. மக்களை மையமாகக் கொண்ட மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை சு.க அமைக்கும். இது அனைத்து சமூகங்களுக்கும் பொருத்தமான சூழலை உருவாக்கும்.

19 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை கணிசமாக குறைத்துள்ளதால், பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியலிலும், அரசுத் துறையிலும் ஊழல் பரவலாக உள்ளது. பாராளுமன்றம் முதல் உள்ளூராட்சி அதிகாரிகள் வரையான அதிகார படிநிலைகளில் குறைந்தது 90 சதவீதம் ஊழல் நிறைந்தவை.

2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மோசடியில் சிக்கிய அவருக்கு மேலானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர கூடுதல் ஆவணங்கள் தயாராக உள்ளன என்றார்.

மாகாணசபை தேர்தலை நடத்தாமைக்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்க வேண்டும் என்றார். மாகாண எல்லைகளை மீள் நிர்ணய அறிக்கையை, பிரதமர் ரணில் தலைமையிலான குழு சமர்ப்பிக்காததை சுட்டிக்காட்டினார்.

2015 ஆம் ஆண்டில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் ஊழல் நிறைந்த மேற்தட்டு வர்க்கத்தை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பை தோற்கடிக்கும் ஒரு சக்தியை வழங்குமாறும் ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

4 கருத்துரைகள்:

He was elected on his promises that he would punish all the corrupted politicians. Did he take any action during the last 5 years against one single politician beside releasing Gnanasara? How could we believe him now that he will put Ranil behind bars? Big sharks never get punished.
He says now SLFP has a reputation being corruption free government. Does he claim that 9 years of Mahinda’s rule was corruption free?

When you point your fingers at your Neighbor, remember that your other three fingers are pointing back to YOU.

Pointing fingers at the wife, resort the husband definitely to another cell in the prison, to be in prison both parties would definitely harm to the people and country as well.

Put all the politician under Jail and bringing British Queen ruling Srilanka would be much batter than current situation of the country.

Corruptions, Breaking promises given citizen and Lying, by All politicians have gone beyond the limits.

They each know only to criticize each other but they try to hide their mistakes. Non of them have development projects for the growth of Srilanka and its people.

Post a Comment