Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, சஜித் என்ன செய்து கொண்டிருந்தார்...?

- Mujeeb Ibrahim -

பிரேமதாச ஜனாதிபதியின் மகன் என்ற அடையாளத்தோடு கட்சியில் நுழைந்தவர் இன்று ஜனாதிபதி அபேட்சகராக ஆகியிருக்கிறார்.

பிரேமதாச யுகம் என்றதுமே ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகளைக்கட்டிக்கொடுத்ததும், கம் உதாவ கிராம எழுச்சித்திட்டங்கள், ஆடைத்தொழிற்சாலைகள் என அகல விரியும் அந்தக்காலம்....
‘2000 ம் ஆண்டு அனைவருக்கும் புகலிடம்’ என்ற பிரேமதாச காலத்து பழைய பதாகைகள் இன்றும் சில கிராமங்களின் ஓரங்களில் சோபையிழந்து நிற்கின்றன.

அதே போல புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது , போர் நிறுத்த காலத்தில் கல்முனையில் 600 பொலிஸ்காரர்கள் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது திருப்பிச்சுட உத்தரவுகேட்ட போதும் சரண்டைய சொன்ன பிரேமதாசவின் உத்தரவு, 60,000 சிங்கள இளைஞர்களை JVP கிளர்ச்சியில் போட்டுத்தள்ளியதோடு அதன் தலைவரை கனத்தை மயானத்தில் வைத்து சுட்டுக்கொன்று சுடலையில் பிணத்தின் சாம்பலை கூட காணாதபடி செய்தது என இன்னொரு நெடிய கொடிய பக்கமும் உண்டு...

சஜித்தின் மூலம் மீண்டும் பிரேமதாச யுகம் என்று கோசம் எழுப்புகிறவர்கள் எந்த யுகத்தை ஆசிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

சஜித் பிரேமதாச எல்லோரையும் போல அதே நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்கிற அதரப்பழசான வாக்குறுதிகளோடு களத்தில் குதித்திருக்கிறார்.

நான் சும்மா கேட்கிறேன் 1993 ம் ஆண்டு அப்பா செத்த பிறகு அரசியலில் இறங்கி 2000 ம் ஆண்டு எம்பியாகி இதுவரை 19 வருடங்கள் பாராளுமன்றத்தில் உரைகளை ஆற்றியிருக்கும் சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆற்றிய காத்திரமான உரையொன்றை பற்றி யாராவது அறிந்திருக்கின்றீர்களா?

அல்லது இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு , அதிகார பரவலாக்கல் பற்றியெல்லாம் பல முன்னணி அரசியல்வாதிகள் பல அரங்குகளில் பேசக்கேட்டிருக்கிறோம்.

சஜித் பேசி எப்போதாவது கேட்டதுண்டா?

சஜித் செய்துவந்ததெல்லாம் பெளத்த விகாரையொன்றிற்கு ரூபா 50,000/- திட்டம். இதன் மூலம் பெருந்தேசியத்தின் திருப்தியை, ஆதரவை சம்பாதிப்பதில் ஆரம்ப முதல் அப்பனை போல கவனமாக இருந்தார்.

போர்க்காலத்தில் அவர் நாட்டில் இருந்தது குறைவு. ஐரோப்பிய நாடுகளில் வெவ்வேறு டீல்களில் இருந்தார் ( டீடெய்லாக எழுதுவதில் சில சிக்கல்கள் உண்டு).

கடந்த நல்லாட்சி அரசாங்கம் (?) ஆட்சிக்கு வந்த போது இவருக்கு வீடமைப்பு அமைச்சும் ரவூப் ஹகீமிற்கு நகரத்திட்டமிடல், நீர்வளங்கள் அமைச்சும் வழங்கப்பட்டன.

இதன்போது கொம்பனித்தெருவில் (Slave Island) வீடுகள் உடைக்கப்பட்டு விரட்டப்பட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மிக்க ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் சஜித்தின் அமைச்சுக்கு சென்று தங்களது பிரச்சினையினை முறையிட முற்பட்ட போது அமைச்சின் விராந்தையில் வைத்தே ‘ஓகொல்லு றவூப் ஹகீம்ட யன்ட’ என்று விரட்டப்பட்ட வரலாறுகளும் உண்டு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உட்பட்ட போது பல அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் மீதான வீண்பழிகளை ஆற்றுப்படுத்தும் பல நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார்கள்.

குறிப்பாக அமைச்சர் மங்கள சிங்கள பெளத்த கோட்டையான மாத்தறையில் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆர்ப்பாட்டமொன்றையே செய்தார்.

சஜித் என்ன செய்து கொண்டிருந்தார்?

2010 ம் ஆண்டு போருக்கு உத்தரவிட்ட தலைவர் மஹிந்தவா? போரை வழிநடாத்தி வென்ற தளபதி பொன்சேக்காவா ? என்ற நிலை உருவான போது தமிழ் மக்கள் பொன்சேக்காவை கொண்டாடியது போல....(???)

இம்முறை இரண்டு பெருத்தேசியவாத முகங்களில் இரண்டாவதின் பாரதூரம் சரியாகத்தெரியாமல் இலங்கை சிறுபான்மையினர் சஜித்தின் பக்கம் சாய்வது தெரிகிறது.

கடந்த தேர்தலிலும் வேறு வழியின்றி ராஜபக்‌ஷேக்களில் அச்சங்கொண்டு பேயில் பயந்து பிசாசில் விழுந்த சீலம் நிகழ்ந்தது!

ஆகையினால் வரண்ட தொண்டைக்கு தண்ணீர் வார்த்த ஆபத்பாந்தவனாய் கொண்டாடுவதற்கும் குதூகலிப்பதற்கும் சஜித்தின் வேட்பாளர் பிரவேசம் அவ்வளவு ‘வேர்த்’ இல்லை என்பதை காலம் புரிய வைக்கும்.

சுருங்கச்சொன்னல் சஜித் இங்லிஷ் பேசும் இன்னொரு சிரிசேன என்பதை தவிர வேறு விசேஷங்கள் ஏதுமில்லை.

11 comments:

  1. Political tricks
    Political agenda
    Sajith was expecting sinhala vots.
    But real matter is if we follow THE DHEEN OUR DAILY LIFE
    ALLAH WILL BRING THE GOOD RULER.
    EVERYTHING HAPPENING BY MUSLIMS IMAAN AND AAMAL IF THIS TWO THINGS OK??ALMIGHTY WILL GIVE US GOOD GOVT.AS WELL

    ReplyDelete
  2. இந்த கட்டுரை யாளரிடம இதைத்தான் எதிர் பார்க்க முடியும்.. சஜித் என்ன செய்து கொண்டு இருந்தார் என்ன செய்வார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  3. This is the talk Fm Muslim areas

    ReplyDelete
  4. எமக்கு தேவை கோடா வரக்கூடாது.சஜித் க்குப் பதிலாக கட்டுரையாளர் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக குதித்தாலும் நாங்கள் உங்களுக்கு வாக்களிப்போம்

    ReplyDelete
  5. Have Muslims forgotten that there is a third candidate by the name of Anura Kumara? Why they always discuss about Sajid and Gota only?

    ReplyDelete
  6. Because of Ranils Govt & cabinet the muslims of this country survived from thousands of deaths & properties. Just think of July 83 or Indian Gujarath violence,the master minds of April 21st bombs were Zahran & his group. They Namely muslim. Now you have another 2 options, The Gota, basically against minorities accused for genocide of Tamils by UN, & JVP's Anura, he wanted to limit the Madrasa activities, recently he mentioned that he wanted the Madrasa age limit to above 15 years.

    ReplyDelete
  7. இந்தக் கேள்விக்கு சஜித்திடமிருந்து சரியான பதிலைக்கேட்டு அறிவுங்கள்.

    ReplyDelete
  8. கட்டுரையாளர் எந்தவேட்ப்பாளரிடமிருந்தும் சிறுபான்மையினர் அதிகம் எதிர்பார்க்கமுடியாது என்றால் அதுஉண்மை, அதேநேரம் சஜித் முஸ்லிம்களுக்கு என்ன நல்லது செய்தார் என்று ஆய்வு செய்வதைவிட என்ன கெடுதிகள் செய்தார் (செய்திருந்தால்) என்று ஆய்வுசெய்வது சிறந்தது, அதேநேரம் கோத்தபாய ஏதாவது நன்மை செய்தாரா (செய்திருந்தால்) என ஆய்வு செய்வதும் மிகப் பொருத்தமாகும், ஆர் பிரேமதாச ஜே.வி.பி யை அடக்கிய காலகட்டத்தில், ஜே.வி.பி கிழக்கிட்கு வெளியே முஸ்லிம்களை அடிமைப்படுத்திக்கொண்டிருந்த வரலாற்றினையும் யாரும் மறக்கமுடியாது, இவைகளையெல்லாம் பார்க்கும்போது நம்மவர்கட்க்கு ஹக்கீம் அல்லது றிசாட் தான் ஜனாதிபதியாக வரவேண்டும், அதிலும் ஒரு புதியவர் வருமுன்னே எதிர்மறையாக அவருக்கெதிராக அபிப்பிராயத்தை முன்வைத்து முழுச்சமூகத்தையும் படுகுழியில் தள்ளிவிடக்கூடாது, முஸ்லீம்கள் முன்னோக்கிச் செல்பவர்களாக இருக்கவேண்டும், இறைவன்தான் எங்களையெல்லாம் பாதுகாக்கவேண்டும்

    ReplyDelete
  9. At least Sajith mostly tends to democracy, other one to dictatorship, third one communist... so think well about the future more than past...

    ReplyDelete
  10. One thing I am sure he is a good choice to save our Mother Land from the clutch of Rajapaksa clan & Co!!

    ReplyDelete

Powered by Blogger.