September 10, 2019

உம்­ரா­வுக்கு புதிய, சட்­டங்­கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)

சவூதி அர­சாங்கம் இஸ்­லா­மிய புது­வ­ருடம் 1441 ஆம் ஆண்­டி­லி­ருந்து உம்­ரா­வுக்கு பல புதிய சட்­டங்­களை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­துள்­ளதால் எதிர்­வரும் உம்ரா பய­ணங்­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை அதி­க­ரிக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக உம்ரா முகவர் நிலை­யங்கள் தெரி­விக்­கின்­றன.

இது­வரை காலம் உம்ரா பயணி ஒரு­வ­ருக்கு அற­வி­டப்­பட்டு வந்த விசா, கட்­டணம் 200 ரியால்­க­ளி­லி­ருந்து 300 ரியால்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் போக்­கு­வ­ரத்து கட்­ட­ண­மாக 120 ரியால்­களும் சவூ­தியில் வர­லாற்று புகழ்மிக்க இடங்­களை தரி­சிப்­ப­தற்­கான கட்­ட­ண­மாக 20 ரியால்­களும் செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ள­தாக கரீம் லங்கா முகவர் நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஏ.சி.பி.எம். கரீம் தெரி­வித்தார்.

சவூதி அரே­பியா அர­சாங்­கத்தின் புதிய சட்ட விதி­க­ளின்­படி உம்ரா பய­ணிகள் சவூதி அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட நட்­சத்­தி­ர­ஹோட்­டல்­க­ளி­லேயே தங்க வைக்­கப்­பட வேண்டும்.

இதனால் அனு­மதி பெற்றுக் கொள்­ளாது ஹரம் ஷரீ­புக்கு அருகில் இயங்­கி­வரும் சிறிய ஹோட்­டல்கள், தங்­கு­மி­டங்கள் உம்ரா பய­ணி­க­ளுக்கு தங்­கு­மி­ட­ம­ளிக்க முடி­யாத நிலை­யேற்­பட்­டுள்­ளது. சவூதி அர­சினால் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள சாதா­ரண நட்­சத்­திர ஹோட்­டல்கள் ஹரத்­தி­லி­ருந்தும் ஒரு கிலோ மீற்றர் மற்­றும 850 மீற்றர் தொலை­விலே அமைந்­துள்­ளன. இந்த ஹோட்­டல்­க­ளிலே உம்ரா பணிகள் தங்க வைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளதால் ஹோட்டல் கட்­ட­ணங்கள் அதி­க­ரித்­துள்­ளன. ஹரத்­துக்கு அரு­கா­மை­யி­லுள்ள ஹோட்­டல்­களில் பெரும்­பா­லான ஹோட்­டல்கள் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பெற்­றுக்­கொள்­ளாத ஹோட்­டல்கள் என்­பதால் சற்று தூரத்­தி­லுள்ள ஹோட்­டல்­க­ளிலே உம்ரா யாத்­தி­ரி­கர்­களை தங்க வைக்­க வேண்­டி­யுள்­ளது.

போக்­கு­வ­ரத்து வச­தி­களும் சவூதி அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்தே பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்­பதும் புதிய விதி­யாகும். இத­னா­லேயே உம்ரா விசா­வுக்­கான கட்­டணம் 300 ரியால்­க­ளுடன் போக்­கு­வ­ரத்து கட்­ட­ண­மாக 120 ரியால்கள் அற­வி­டப்­ப­டு­கின்­றன.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்கைத் தொடர்பு கொண்டு இது தொடர்­பாக வின­வி­ய­போது அவர் இதனை உறுதி செய்­த­துடன் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சவூதி அரே­பி­யா­வினால் இது தொடர்பில் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.உம்ரா பய­ணிகள் சவூதி அரே­பி­யாவில் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே சவூதி அரே­பிய இள­வ­ரசர் முஹம்மத் சல்மான் இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்ளார்.

இதேவேளை, சவூதி அரேபியாவின் புதிய சட்ட விதிகள் வரவேற்கத்தக்கதாகும். இதனால் உம்ரா யாத்திரிகர்கள் நன்மையடைவார்கள். ஆனால் கடந்த காலங்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக இருந்த உம்ரா கட்டணம் இதன் பிற்பாடு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் என்று கரீம் லங்கா முகவர் நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

4 கருத்துரைகள்:

சவூதி அரசாங்கம் அதிகரித்துள்ள விசா, போக்குவரத்து செலவுகள் ரூபா 15,397.51 சதமாக அதிகரிக்கும் போது ஏன் 40,000 ரூபாக்கள் அதாவது ஏறத்தாழ மூன்று மடங்கை இலங்கை முகவர்கள் அதிகரிக்க வேண்டும் என முஸ்லிம் கலாசாச திணைக்களத்தைக் கேட்கின்றோம்.

Athuthaan ENGAL MUSLIM KALIN BUSSINESS.(BBS)YAI VIDA MOOSAMANA BUSINESS.

உம்ரா வெசயத்துல இந்த ஹஜ்ஜு முகவர் மாத்தயாக்களையும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் தெணைக்களத்தைப் பற்றியும் ரொம்ப பேச வேனாங். நூங்க எப்புடித்தான் நாங்க கொரச்சாலும் அவங்கள் தாங்க விரும்புர மாதிரித்தான் செய்வாங்க.

AIR TICKET 85,000, VISA 24,000(WITH OUT TRANSPORT) ,TRANSPORT AND ACCOMMODATION.
140,000 ALSO NOT POSSIBLE.

Post a comment