Header Ads



சஜித்தின் தேர்தல் பிரச்சார பொறுப்பு, என்னிடம் வழங்கப்பட்டுள்ளது - திஸ்ஸ அத்தநாயக்க

ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலையானவர்களின் வாக்குகள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகள் தீர்மானகரமானவை எனவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -27- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அவரது தேர்தல் பிரசாரம் தொடர்பான பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்ற நான் தயார். கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான பாலமாக இருக்க எதிர்பார்த்துள்ளேன்.

நான் தேசிய அரசியலுக்கு வந்துள்ளேன். சஜித் பிரேமதாச சுய முயற்சியில் செயற்பட்டார். அவர் குடும்ப அரசியலை ஆரம்பிக்கவில்லை.

அவர் தனது தந்தை இறந்த பின்னர் அரசியலுக்கு வந்தவர். ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ அல்லது ஏனையோரோ குடும்ப அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. 25 வருடகாலமாக ரணிலுடன் இருந்தார்.ரணிலுக்கு தோல்விக்கு மேல் தோல்வி, ஒருசில மாதங்கள் மாத்திரம் மஹிந்தவுடன் சேரந்து கொண்டார், மஹிந்தவுக்கு தோல்வி. இப்போது ஆரம்பிக்க முன்பு சஜித்துடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்துக்குப் பொறுப்பாம். சஜித்துக்கும் அதே முடிவை திஸ்ஸ கொண்டுவருவாரா?

    ReplyDelete

Powered by Blogger.