Header Ads



நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்

இந்து சமுத்திரத்தில் வல்லரசு நாடுகளின் மோதல்களுக்கு இலங்கை சிக்கக் கூடிய வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுள்ளதால், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற லங்கா சமசமாஜக் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. சிறிய நாடு என்பதற்காக உலக வல்லரசுகளின் மோதல்களுக்குள் நாம் தலையிட முடியாது.

இலங்கை எப்போதும் தனது இறையாண்மையை பாதுகாப்பு அணிசேரா கொள்கையை முன்னெடுத்த நாடு. வல்லரசுகளின் தலையீடுகள் காரணமாக எமது அணிசேரா கொள்கை இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மிடம் தெளிவான நோக்கமும், திட்டங்களும் உள்ளன. சமசமாஜக் கட்சியின் இதயத்திற்கு நெருக்கமான மக்களை கேந்திரமாக கொண்ட வேலைத்திட்டங்களின் அடிப்படையில் எமது பொருளாதார வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் வறுமையில் இருப்பார்கள் என்ற பயனில்லை. வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

பொருளாதார கேந்திரமான ஆசியாவில் நாம் இருக்கின்றோம். ஆசியா தற்போது படிப்படியாக முன்னேறி வருகிறது. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியாவை சூழ சிறந்த சந்தை உருவாகி வருகிறது. இதனை பிரயோசனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

30 ஆண்டுகள் பயங்கரவாதம் காரணமாக நாம் இதனை தவற விட்டோம். இந்த சந்தர்ப்பத்தை தவறவிட முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் இருக்கவில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.