Header Ads



ரணிலை சந்தித்து சஜித்தை ஜனாதிபதி, வேட்பாளராக்குமாறு முதன்முதலில், கோரிக்கை விடுத்தவர்


ஜனாதிபதி வேட்பபாளர் சஜித் பிரேமதாசவின், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான பிரதான முகாமையாளராக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் வீட்டில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, சம்பிக்க ரணவக்க, பழனி திகாம்பரம், றிசார்ட் பதியூதீன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

அமைச்சர் மலிக் சமரவிக்ரம 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். அத்துடன் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளருமாவார்.

சஜித் பிரேதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு பல மாதங்களுக்கு முன்னர் பிரதமரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கோரிக்கை விடுத்த முதல் நபரும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.