Header Ads



நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதவர்களே, சர்வாதிகார பாதையை தேர்ந்தெடுப்பார்கள் - ரணில்

நாட்டை  அபிவிருத்தி செய்ய முடியாதவர்களே சர்வாதிகார பாதையை  தேர்ந்தெடுப்பார்கள். சர்வாதிகாரத்தால்  எந்த முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை. சர்வாதிகாரத்தால்  எதனையும் சாதிக்கலாம் என்று ஒருசிலர்  நம்புகிறார்கள். அதற்கு மாறாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாவிட்டாலும் ஜனநாயகத்தால்  எதனையும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதை கடந்த நான்கரை வருடங்களில் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

குறைந்த வருமானம் பெரும் 3300 குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று -13- கொழும்பு சுகததாச உள்ளக விளையாடரங்கில் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. 

மாநகரங்கள் , மேற்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த  நிகழ்வில்  அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க , மனோ கணேசன், எரான் விக்ரமரத்ன ஆகியோரும்  பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹூமான், ஹிருணிகா பிரேமச்சந்திர, எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும்  கருந்துக்கொண்டார்கள்.

பாராளுமன்றத்தில்  பெரும்பான்மையின்றி  பல்வேறு பணிகளை எம்மால் முன்னெடுக்க முடியுமாக இருந்தால் பெரும்பான்மை கிடைத்தால் இதனை இதனைவிட  பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் .

வெள்ளை வேன் கலாசாரதினூடாக ஜனநாயக இலக்குகளை அடைய முடியாது. சகலருடனும் ஒற்றுமையாக செயற்படுவதினூடாகவே  இலக்குகளை அடைந்துக்கொள்ள முடியும். 

கட்டட நிர்மாணங்களை  மேற்கொண்டது போன்று  மறுபுறம் ஜனநாயகத்தையும் படிபடியாக கட்டியெழுப்பியுள்ளோம்.  கடந்த அரசாங்கத்தால்  இந்த  அரசாங்கத்துக்கு  அதிகளவான கடன் சுமையையே கொடுக்க முடிந்தது. சுமைகளின் மத்தியில் ஆட்சியை பொறுப்பேற்று கொண்டிருந்தாலும் சவால்களை  பொருட்படுத்தாமல்  சிறந்த வெற்றி இலக்குகளை அடைந்துக்கொள்ள கூடியதாக இருக்கிறது என்றும் இதன்போது கூறினார்.

1 comment:

  1. Mr Ranil you dont have any rights to talk about development in this
    Country.you spoiled unp party.and country.your one of the big agent of mossad in srilanka.70years old men better to rest.not to GREEDY FOR POWER

    ReplyDelete

Powered by Blogger.