Header Ads



ரூபவாஹினியை கைப்பற்றினார் மைத்திரி

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கு இன்று -09- முற்பகல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஒன்று உருவாகியதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இனோகா சத்தியலிங்கம் செயற்பட்டு வருகின்ற நிலையில் புதிய தலைவர் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இனோக்கா சத்தியலிங்கம் அந்த பதிவியில் இருந்து நீங்க முடியாதென கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. மஹிந்தவின் மற்றொரு திட்டத்தை மை3 சாதித்துவிட்டார். இலங்கையின் அரசியலை உலக அரங்கில் பதவிவெறியும்,மட்டற்ற பதவி ஆசையும் கொண்ட கள்வர்களின் நாடகம் என உலகம் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. மற்றொரு வகையில் கூறினால் சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்காவின் நீண்டகால அடிப்படையிலான திட்டங்களைச் சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த பதவிவெறி பிடித்த கூட்டம் களம் அமைத்துக்கொடுக்கின்றது. இறுதியில் இந்த நாட்டு மக்களை படுதுன்பம், பரம்பரையாக கடன்கார ர்கள், வாழ வழியற்றவர்கள் எ ன்ற நிலைப்பாட்டில் விட்டுவிட்டு இந்த கோமாளிகள் அழிந்து செல்வது மட்டும்தான் எஞ்சியிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.