Header Ads



பலாலி விமான நிலையத்தின், பெயர் மாற்றம் செய்யப்படுகிறது

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, நேற்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற  பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

2 comments:

  1. Really is that Kani Mozhi M. P. deputy president of D. M. K !
    When you presented that position !

    ReplyDelete

Powered by Blogger.