Header Ads



பொதுஜன பெரமுன இனவாதச் செயற்பாடுகளுடன், தேர்தலை வெற்றிகொள்ள முயற்சி செய்கிறது

ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன,  இனவாதச் செயற்பாடுகளுடன் தேர்தலை வெற்றிகொள்ள முயற்சி செய்கிறது.  இந்த விடயம் தொடர்பில்,  சிறுபான்மையினரான  முஸ்லிம், தமிழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென, மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் அவரிடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், மஹிந்தவுடன்  இருக்கும் அணிகள் இனவாத போக்குடையன. அந்த அமைப்புகள், நாட்டை பதற்ற நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கில் செயற்படுகின்றன என்றார்.

இவ்வாறான இந்த  சந்தர்ப்பத்தில்,  முஸ்லிம் தலைமைத்தவமும் தமிழ் தலைமைத்துவமும்  ஒன்றுபட்டு,  இரு சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இந்தக் காலகட்டதில், முஸ்லிம், தமிழ் சமூக உறவு பலம்வாய்ந்த  உறவாக கட்டியெழுப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், உறுதியான கட்டுக்கோப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டு,  தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் சீராகப் பயணிக்குமாயின்,  இரு தரப்புகளுக்கிடையே எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றார்.

No comments

Powered by Blogger.