Header Ads



எனக்கு அரசியல் தொடர்பில், எதுவும் தெரியாது - மாலிங்க கூறிய அழகிய விளக்கம்

எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல. நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன் என இலங்கை அணியின் இருபதுக்கு - 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் .09- ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் ஊடகவியலாளரின் கேள்விக்கு மேலும் பதிலலிக்கையில்.

முரளி தொடர்புபட்டமை குறித்து ஏதேனும் கருத்துள்ளதா ?

எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும். கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும். அது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும். வியத்மக குறித்து நீங்கள் கூறும் வரை எனக்கு என்னவென்று தெரியாது. முரளி சேர்ந்திருந்தால் அது தனிப்பிட்ட விருப்பமாக இருக்கும். 

கிரிக்கெட் வீரர்களும் தற்போது அரசியல்வாதிகளாக மாறுகின்றனர். பாகிஸ்தானிலும் அவ்வாறு . நீங்கள் பிரபலமானவர்  உங்களுக்கு எண்ணமில்லையா ?

நான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே பிரபலமானவன். கிரிக்கெட் விளையாட்டில் நான் முடிந்தவரை செய்வேன். பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும். எனினும் ஆட்சியென்பது நிருவாகம் ஆகும். நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன். என பதிலளித்துள்ளார்

1 comment:

  1. Great Statement...
    Let All the politician in our parliament know that

    "HAVING ADMINISTRATIVE SKILLS & KNOWLEDGE" important for their position.

    ReplyDelete

Powered by Blogger.