Header Ads



புற்றுநோயினால் பாதிக்கப்படும் அரச ஊழியர்களுக்கு 9 மாத சம்பளத்துடன் கூடிய லீவு

அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவராயின் அவரது சிகிச்சைக்கென ஒன்பது மாதத்திற்கு மேற்படாத வகையில் சம்பளத்துடன் கூடிய விசேட லீவை வழங்குவதற்கு ஏற்ற வகையில் தாபனக் கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்குரிய அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.  

இது தொடர்பாக பொதுநிர்வாக அமைச்சு 23/2019 ஆம் இலக்க சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய புற்றுநோய்க்காக 06 மாதங்களுக்கு மேற்படாத வகையில் முழுச் சம்பளத்துடன் மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் விசேட லீவு வழங்கப்படும்.  

மேலும் லீவு தேவைப்படுமாயின் வைத்திய சபையின் பரிந்துரையின் பேரில் மேலும் 03 மாதங்களுக்கு மேலதிக விடுமுறையை சம்பளத்துடன் வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு முன்னர் ஆறு மாதம் மட்டும் விசேட லீவு வழங்கப்பட்டது.விசேட லீவு தாபனக் கோவையில் காசநோய், தொழுநோய் என்பவற்றுக்கும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.