Header Ads



60000 பேரை கொன்றவரின் மகனுக்கு ஆதரவளிப்பதா - சஜித் தரப்பின் JVP யுடனான முயற்சி தோல்வி

ஜே.வி.பி.யின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடுமையான போட்டி நிலைமை நீடித்து வருகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க உத்தேசித்துள்ள தரப்பினர் ஜே.வி.பி.யின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமரிடம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சஜித் தரப்பினரும் ஜே.வி.பி.யின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பில் உதவியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சஜித் தரப்பு பிரதிநிதியொருவர் ஜே.வி.பி அரசியல் பீட உறுப்பினர் ஒருவரை சந்தித்துள்ளார்.

இதன் போது தமது தோழர்கள் 60, 000 பேரை கொன்று குவித்த பிரேமதாசவின் புதல்வருக்கு ஆதரவு வழங்குவதா அந்தப் பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுத்த எடுப்பிலேயே தோல்வியில் முடிவடைந்துள்ளது என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

5 comments:

  1. ஒருவர் செய்த தவறுக்கு இன்னொருவர் எவ்வாறு பொறுப்பாக முடியும்.தந்தை என்பதற்காக எதுவும் செய்யாத மகன் மீது குற்றம் சொல்வது முட்டாள்தனமாகும்.

    ReplyDelete
  2. 1971 கலீல் 15000 பேரை கொன்று குவித்த அம்மையாரின் மகளோடு 2003 இல் பரிவாச அரசில் சேர்ந்து நான்கு அமைச்சுகளையும் எடுக்க முடியும் என்றால் ஏன் இப்போ சஜித்தோடு சேரமுடியாது?? தேசத்துரோகிகள் கொள்ளப்படத்தான் வேண்டும்

    ReplyDelete
  3. Whether you killed sixty thousand or six hundred doesn't matter as JVP has also killed many innocent people. This cannot be erased from the history. JVP cannot be compared with UNP as UNP has done plenty of development for the country.

    ReplyDelete
  4. JVP is already fielding a candidate. How can they support Sajid or Karu when their own candidate contesting?

    ReplyDelete

Powered by Blogger.