Header Ads



ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்வதற்காக 5 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி அதபத்து லியனகே பந்துல குமார மற்றும் ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரீ ஆகியவர்கள் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. Comedy க்கு அளவே இல்லயா ஐயா

    ReplyDelete

Powered by Blogger.