Header Ads



முஸ்லிம் வாக்குகள் 56 வீதம் சஜித்துக்கும், 5 வீத வாக்குகள் கோத்தாபயவுக்கும் கிடைக்கும் - மங்கள

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் முஸ்லிம்களின் மக்களின் 56   வீதம் வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கும் என கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் ,

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு 37 % முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் எனவும் கோத்தாபயவுக்கு 11 % வாக்குகள் கிடைக்கும்  கருத்து கணிப்பு மூலம் தெரியவந்ந்துள்ளது என குறிப்பிட்டார். 

அதே நேரம் சஜித்துடன் கோத்தா போட்டியிட்டால் முஸ்லிம் மக்களின் 5 % வாக்குகள்  கோத்தாபயவுக்கு கிடைக்கும் என கணிப்பு மூலம் தெரியவந்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

Powered by Blogger.