Header Ads



சண்­மு­கா­ பாடசாலையில் 3 ஆசி­ரி­யைகளுக்கு, அபாயா அணிய தடை - நேரசூசி வழங்கவும் அதிபர் மறுப்பு

ஆசி­ரி­யை­க­ளாக நிய­மனம் பெற்று திரு­கோ­ண­மலை சண்­முகா தேசிய பாட­சா­லைக்கு சென்­றுள்ள மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு அபாயா அணிந்து செல்­வதில் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் கல்­வி­யியற் கல்­லூரி டிப்­ளோ­மா­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. இதன்­போது நிய­ம­னம்­பெற்ற மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யைகள் கட­மை­களை பொறுப்­பேற்க கடந்த 20 ஆம் திகதி குறித்த பாட­சா­லைக்கு அபாயா அணிந்து சென்­ற­போது, அதி­பரால் அபாயா அணிந்­து­வர முடி­யா­தெனக் கண்­டிப்­பாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன், அவர்­க­ளுக்­கான நேர­சூ­சியும் வழங்­கு­வ­தற்கும் மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

சாரி அணிந்து வந்தால் மாத்­திரம் பாட­வேளை நேர­சூசி தர­மு­டியும். இல்­லையேல், ஆசி­ரியர் ஓய்­வ­றையில் இருந்­து­கொள்­ளுங்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட தரப்­பி­லி­ருந்து தக­வல்கள் கிடைத்­தன. 

இது விட­ய­மாக குறிப்­பிட்ட மூன்று ஆசி­ரி­யை­களும் இசு­ரு­பா­ய­வி­லுள்ள கல்வி அமைச்­சுக்கு சென்று தமது முறைப்­பாட்டை பதிவு செய்­துள்­ளனர்.

இதே­வேளை, முன்­ன­தாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி 5 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் குறித்த பாட­சா­லையில் சாரி அணிந்து வர வற்­பு­றுத்­தப்­பட்­ட­மையால் தற்­கா­லிக இட­மாற்­றத்தை பெற்று சென்­றனர். இவ்­வாறு குறித்த பாட­சா­லை­யி­லி­ருந்து பாதிப்­புக்­குள்­ளான ஆசி­ரி­யை­களுக்கு எந்­த­வி­த­மான நிரந்­த­ர­மான தீர்­வொன்றும் கொடுக்­கப்­ப­டாத நிலையில் தற்­போது மீண்டும் பிரச்­சி­னை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு தொடர்ந்து முஸ்லிம் பெண்­களின் கலா­சார ஆடையை மறுத்து வரு­கின்ற நிலையில் அர­சாங்­கத்­தினால் நிரந்­தரத் தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர். ஏற்­க­னவே, ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து செல்­வதில் சிக்கல் இல்லையெனக் கல்வியமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் குறிப்பிட்ட திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலை அதிபரும் அதன் நிர்வாகத்தினரும் அதற்கெதிராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. Sri Lanka வில் தடை செய்யப்படாத அபாயாவை,இந்த அதிபர் எப்படி தடை செய்ய முடியும்.சம்பந்தப்பட்டவர்கள் இதற்க்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள்

    ReplyDelete
  2. We have to ask the relevant authorities whether this Shanmuga School is a government school or private school.

    Abaya is a very decent dress and more suitable for lady teachers. Ministry of Education has given ok for this dress and therefore no reasons for the principal and others to say no for Abaya.

    Therefore, the Ministry of Education and the relevant authorities should tell these teachers whether the dress code law is not applicable to Shanmuga school or should take stern action against this unruled principal of this school. I am writing this because I am a patriotic citizen of this country and abide by the law and order of the Democratic Socialist Republic of Sri Lanka.

    ReplyDelete
  3. அந்த பெண் விபச்சார அதிபருக்கு இதுவரை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் இது

    ReplyDelete
  4. அதிபர் ஞானத்தின் keep போல

    ReplyDelete
  5. I think she wants to learn from experience. She needs tomatoe and egg treat or something better than that.

    ReplyDelete
  6. She migmi havh effected by mental disability. Admit

    ReplyDelete

Powered by Blogger.