Header Ads



'ரணிலா சஜித்தா? என 106 Mp க்களும் தீர்மானிக்க வேண்டும் - இதுதான் ஹெல உறுமயவின் விருப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவா என்பது குறித்து, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் 106 பேர் தீர்மானிக்க வேண்டுமென்பதே,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தீர்மானம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

 குறித்த 106 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இரகசிய  வாக்கெடுப்பைக் கோரியாவது  ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது சிறந்த விடயமென்றும் தெரிவித்தார்.

இன்று (16) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

  1. You have very good bold ideas. In the meantime you are using your brain for your selfish political gains from Buddhist. It will destroy your image. otherwise you could be a common candidate now. So please do a good job without racism then future generations will respect you.

    ReplyDelete

Powered by Blogger.