Header Ads



நவம்பர் 1 முதல் கண்களை ஸ்கேன்செய்து, கடவுச்சீட்டு வழங்கும் முறை அறிமுகமாகிறது

கடவுசீட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் கண்களை ஸ்கேன் செய்யும் புதிய முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என தெரியவருகிறது.

குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் ஜெனரல் பசன் ரத்நாயக்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த வருடம் நவம்பர் மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தடவுள்ளது. இந்த புதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தேவையான இயந்திரங்கள் உரிய நேரத்தில் பெறப்படும்.

குற்றம் சுமத்தப்பட்டு தடுப்பு பட்டியலில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதன்படி, கடவுசீட்டுக்களில் சேர்க்கப்படும் இந்த விபரங்களை ஆராய விசேட ஸ்கேனர் இயந்திரங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.