Header Ads



கோத்தாவை வாபஸ் பெறப் போவதில்லை, தலைமைத்துவ பற்றாக்குறையால் UNP தள்ளாடுகிறது - மஹிந்த

தலைமைத்துவ பற்றாக்குறையால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம், ருவன்வெலிசாய விகாரையின் விஹாரதிபதியை நேற்று (23) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு வெகுவரைவில் மக்கள் பதில் அளிப்பார்கள் எனவும் அவர் கூறினார். 

மேலும், புதிய இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு அது சரியான முடிவு என அவர் பதிலளித்தார். 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருவதால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் மாற்றம் நிகழுமா என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார். 

இதற்கு பதில் வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நியமித்தவற்றை மீண்டும் மாற்றப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.