Header Ads



UNP யினால் இம்முறை ஒன்றும் செய்யமுடியாது, எப்போதும் மோதிக்கொண்டே இருக்கின்றார்கள் - மஹிந்த

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ போட்டியிட்டால் அதனை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் முழுமையான ஆதரவு எங்களுக்கு தான் கிடைக்கும். எப்போதும் சிறுபான்மையினர் ஏமாற்றமடைந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியினால் இம்முறை ஒன்றும் செய்ய முடியாது. எப்போதும் மோதிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். தலைவரே பதவிக்காக சண்டையிடுகின்றார்.

எனினும் இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக சஜித் வருவதனையே நான் விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் கட்சி சார்பில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுகிறார். எனினும் சஜித் பிரேமதாஸவும் போட்டியிட்டால் அவரே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.