Header Ads



ரணிலின் ஆசியுடன் ஜனாதிபதி வேட்பாளராக கரு, அவர் UNP தலைவர் பதவியை ரணிலுக்கு பாதுகாத்து கொடுப்பார்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டதும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக கரு ஜயசூரிய, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மூன்று தரப்பாக பிளவுப்படுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று -21- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

எனினும் நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

புதிய அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்ததும், கரு ஜயசூரிய, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வார்.

அவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசியுடன் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார். கரு ஜயசூரிய, கட்சியின் தலைவர் பதவியை ரணிலுக்கு பாதுகாத்து கொடுப்பார்.

பிரதமருடன் சரதுங்க விளையாட்டையோ, டெஸ் விளையாட்டையோ எவருக்கும் விளையாட முடியாது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது என்றாலும் எந்த தருணத்திலும் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.