Header Ads



ஹிஸ்புல்லாவினால் இனி MP ஆக முடியாதா...?

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவினால் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்புரிமையை ஏற்க முடியாது என்று சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டி இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அசூ மாரசிங்க நாடாளுமன்றில் வைத்து நேற்று -07- தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கான ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டதன் மூலம், நாடாளுமன்ற உறுப்புரிமை மீதான பரஷ்பர முரண்பாட்டைத் தோற்றுவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர் பிரதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் குறித்த தனியார் பல்கலைக்கழகத்தின் உரித்து நிறுவனமான ஹிரா பௌண்டேசனின் தலைவராகவும் இருந்ததுடன், அதன் சார்பில் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இலங்கை அரசியல்யாப்பின் 91-ஈ சரத்துக்கு அமைய, 2013ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்தான திகதியில் இருந்து அவரால் நாடாளுமன்ற பதவி வகிக்க தகுதி அற்றவராக கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Hiru

3 comments:

  1. No problem,no need parliament entry again for mr.hisbullah.he will be become governor of eastern province very soon.

    ReplyDelete
  2. Mr. Hizbullah.. brought a big amount of money or foreign investment with 0 interest from Saudi Arabia. A single persons effort and built a university for our mother land.
    The racist cant digest this, while they swallowing innocent peoples Tax money from Central Bank and other projects. Why cant understand these to Attorney General Dept & PS Committee members

    ReplyDelete
  3. Punnakuth thalaiver. He does not know
    how to do a work effectively and correctly. Allame kuppain velaihak
    ;

    ReplyDelete

Powered by Blogger.