Header Ads



ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைத்த மகிந்த - முதுகெலும்பு உடைபட்ட Mp க்களினால் அச்சம்


நாடாளுமன்ற தரையை சுத்தப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட திரவத்தினால் பல உறுப்பினர்கள் வழுக்கி விழுந்து முதுகெலும்பை உடைத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் அவரது பாதுகாவலர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான உறுப்பினர்கள் கண்காணித்துள்ளனர்.

அவதானமாக வாருங்கள், கீழே சவர்க்காரம் பூசியது போன்று வழுக்குகின்றது என கூறிய குமார சிறிஹெட்டியே, மஹிந்தவுக்கு ஏற்படவிருந்த ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்.

நாங்கள் அடி வைப்பதனை பார்த்து அரசாங்கம் பயந்துவிட்டது. அதனாலேயே வீழ்த்த பார்க்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, லக்ஷ்மன் யாப்பா மஹிந்தவிடம் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் தரையை சுத்தப்படுத்த கொண்டுவந்த திரவம் மாறியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஒரு கேன் திரவம் 4,650 ரூபாய் என்ற கணக்கில் 50 கேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரசாயன திரவத்தால் 26 பேருக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழுக்கி விழுந்துள்ளனர். இதில் பெண் உறுப்பினர்களும் அடங்கும்.

திரவத்தை கொண்டு வந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தீர்மானிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

1 comment:

  1. பொறுத்திருந்து பார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஆழமாக கீழே விழுவார்.

    ReplyDelete

Powered by Blogger.