Header Ads



JVP யின் நோக்கம் ஜனாதிபதி, தேர்தலில் வெற்றிபெறுவது மாத்திரமல்ல


நாம் எதிர்பார்ப்பது போன்று நாட்டை முன்னேற்றும் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது மாத்திரம் போதுமானதல்ல.

ஏனெனில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை முன்னேற்றுவதற்கான பயணம் என்பது ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும். இவ்விரண்டு தேர்தல்கள் குறித்த தெளிவான இலக்கு மற்றும் திட்டமிடலுடனேயே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகின்றோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

(நா.தனுஜா)

1 comment:

Powered by Blogger.