Header Ads



ஈஸ்டர் தாக்குதல் பற்றி IS தலைவன், பக்தாதிக்கு முன்கூட்டியே தெரியாது - ஐ.நா.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும்  ஜேஎம்ஐ அமைப்பு 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 உறுப்பினர்களை கொண்டிருந்தது எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஜேஎம்ஐ அமைப்பு 2015 இல் உருவாக்கப்பட்டதாகவும் அது சுமார் 150 உறுப்பினர்களை கொண்டிருந்ததாகவும்  அவர்களில் பலர் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றனர் எனவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் இணையம் மூலம் ஐஎஸ் அமைப்பு உள்ளுர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் முறை குறித்து கற்றுள்ளனர் மேலும் தாங்கள் தயாரித்த குண்டுகளை பரிசோதனை செய்துள்ளனர் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட விசாரணைகள் ஐஎஸ் அமைப்பிற்கு இந்த தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை என்பதும் அந்த அமைப்பு முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் உள்ளுரிலேயே உருவாக்கப்பட்டதுடன் ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகளால் உந்தப்பெற்று முன்னெடுக்கப்பட்டது எனவும் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரங்கள் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளதையும் உள்ளுர் குழுக்கள் எதிர்பாராத இடங்களில் உருவாகி  குறிப்பிடத்தக்க பயங்கரவாத திறனை உருவாக்குபவையாக மாறக்கூடிய ஆபத்துள்ளதையும் புலப்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

.ஐஎஸ் அமைப்பு தற்போது இலங்கையில் இடம்பெற்றது போன்ற ஐஎஸ் அமைப்பினால் உத்வேகம் பெறப்பட்ட தாக்குதல்களை நம்பியுள்ளது என ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.