Header Ads



இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முஸ்லிம் சந்தேக நபர்களை அமெரிக்க FBI விசாரித்தது

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் அமெரிக்காவின் எவ்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை,  சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஒப்புக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய ருவன் விஜேவர்த்தன,

‘அமெரிக்க புலனாய்வாளர்களுக்கு அரசாங்கம் உதவியதாக, விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார்.

எவ்வாறாயினும், பயங்கரவாதம்  உலகெங்கும் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் எல்லோரையும் நாங்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

நாங்கள் பிரித்தானியா, பிரான்ஸ் மாத்திரமன்றி ரஷ்யாவுடனும் கூட இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது,

அந்த அடிப்படையில் தான், சந்தேகநபர்களைச் சந்திக்க எவ்பிஐ அதிகாரிகள் வெலிசறை கடற்படை முகாமுக்குச் சென்றனர்.

No comments

Powered by Blogger.