Header Ads



காஷ்மீர் விவகாரத்தில், ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன..?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். 

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை இந்த பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தது. 

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் சர்ச்சைக்குரிய நிலைமையை மாற்ற முற்படும் இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டமை குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. 

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஜம்மு காஷ்மீர் முழுமையாக முடக்கப்பட்டு, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதையும், இந்த நடவடிக்கை ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதையும் ஜனாதிபதிக்கு விளக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ள பாகிஸ்தான், ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு அமைய இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும் என கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

சார்க் அமைப்பை மீண்டும் செயல்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தையை நடத்த இலங்கையின் மத்தியஸ்தம் குறித்தும் ஜனாதிபதி கூறியிருந்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

பிராந்தியத்தின் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது அவசியம் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியதாக பாகிஸ்தான் உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் உயர் ஆணையரின் கோரிக்கைக்கு அமையவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. 

பாகிஸ்தான் உயர் ஆணையரின் கருத்துகளை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் மிக நெருங்கிய நட்புறவை பேணி வருவதாக கூறியுள்ளார். 

பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

(பிபிசி தமிழ்)

4 comments:

  1. Muslim parliamentarians on behalf of the Muslims of Sri Lanka should denounce this political process in the Indian parliament (Lok Sabah). and to demand the Sri Lankan government to support Pakistan's moves at the UN, Insha Allah. SRI LANKA SHOULD SUPPORT PAKISTAN AT THE UN TO FREE KASHMIR FROM INDIAN INVASION, Insha Allah.
    It is sad to see a Prime Minister of a Democratic country which is a member of the UN, without “DENOUNCING WHAT INDIA HAS DONE” to wish well to the passing of a bill by the Narendra Modi’s BJP government to oppress the Kashmir people further. The Bill is repealing legislations 35 A which deals with the peoples’ rights in Kashmir and Bill 370 which deals with India’s administration of Kashmir which was put in place on the advice of the British in 1950 just after India was partitioned in 1947. This Prime Minister of ours is playing to the gallery by his tweet published, hoping that the Buddhist in Sri Lanka will vote him, and his alliance to power at the next presidential election and general elections.
    “Ladakh” is mountainous terrain and has the very little (extremely small) population - 150,000 and yes, they are Buddhists. But there are Muslims and Hindus also in that population. Shame on our Sri Lanka PM to make such a racial and discriminative “TWEET” telling that India will create a first Buddhist State. Shame on Ranil Wickremesinghe to "FORGET" Sri Lanka is a BUDDHIST STATE.
    Ranil has failed to respect the Muslim majority Kashmir which has been now made to suffer and has not made any reference to that “INJUSTICE”. THE MUSLIMS OF SRI LANKA SHOULD NEVER FORGIVE THIS SHAMELESS PM OF OURS (Sri Lanka) FOR FORGETTING HOW HE IS STILL SITTING IN THE PM CHAIR BECAUSE OF THE MUSLIM VOTES THE “HANSAYA” AND THE UNF GOT IN 2015.
    “The Muslim Voice” acknowledges the oppression of the Kashmiri People by India over the last 70 years, without conducting the “PLEBICITE” ordered by the UN in 1948. India went to war with Pakistan on the contrary. The BJP government headed by Prime Minister Narendra Modi proposed Monday revoking Article 370 of India’s constitution, which confers special rights to permanent residents of the state of Jammu and Kashmir. “The Muslim Voice” fully and totally rejects this political move by the BJP government of Narendra Modi and his minister of home affairs, Amith Shah. “The Muslim Voice” calls the government of Sri Lanka and all 21 Muslim parliamentarians on behalf of the Muslims of Sri Lanka to denounce this political process in the Indian parliament (Lok Sabah) which is to further oppress the people of Kashmir and deny them democracy further. PRESIDENT MAITHRIPALA SIRISENA SHOULD SUPPORT THE CAUSE OF THE PEOPLE OF KASHMIR FULLY.
    Noor Nizam – Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener The Muslim Voice”.

    ReplyDelete
  2. காஷ்மீர் 100% இந்தியாவுக்கு சொந்தமான பகுதி. 1400 ம் ஆண்டுகளில் முஸ்லிம்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. பின்னர் முஸ்லிம்களுக்காக பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உருவாக்கப்பட்டன போல், தற்போது காஷ்மீரும் ஜம்மு-காஷ்மீர (இந்தியா), அசாத்-காஷ்மீர (பாக்கிஸ்தான்) என பிரிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்திய முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்கும், ஜம்மு-காஹ்மீர முஸ்லிம்கள் அசாத்-காஹ்மீருக்கும் போகுமாறு UN கூற வேண்டும். இத்துடன் இந்திய-முஸ்லிம்கள் பிரச்சனைகள் தீர்ந்தன. Every one will be happy.
    -

    ReplyDelete
  3. Hope it is time Tamil nasu and Kerala to start proc3ss of getting into separate country from this brutal Indian administration.

    India is too big for justful ruling by these weak and incapable racist. So batter to get devised so that Tamil nadu a d Kerala can develop faster in this current human world.

    ReplyDelete
  4. @TrueF, உங்களுக்கு தான் காஷ்மீர் வரலாறு தெரியவில்லை.
    நான் மேல் சொன்ன வழிமுறை தான் இந்திய-காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மிகச்சிறந்த நியாயமான வழிமுறை


    ReplyDelete

Powered by Blogger.