Header Ads



வேட்புமனு தாக்கல்செய்த பின்னரே, யாருக்கு ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்படும் - ரிஷாட்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின்னரே, அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வேட்பாளர் குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை எனவும், தமது கட்சியே அது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்பு மனு கோரல் திகதி என்பன இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பொருத்தமானவர் யார் என்பதை ஆராய்ந்த பின்னரே தீர்மானமொன்றுக்கு வரமுடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எந்த தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. மிகச் சிறந்த முடிவு.

    ReplyDelete
  2. ITS A good decision.... dont join blindly with Sajith... he is with Champika & modi's agenda and propaganda! find alternative person!

    ReplyDelete

Powered by Blogger.