Header Ads



பசிலின் வருகையுடன் இனிதே முடிந்த பேச்சு, மைத்திரி - மகிந்த சந்திப்பார்கள் என அறிவிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டணி அமைப்பது தொடர்பான 7ஆவது கட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டுடன் நிறைவுப்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தின் இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் -27- ஆரம்பமாகியது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில், ஜிஎல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும ஆகியோர், அந்தக் கட்சி சார்ப்பில் பங்கேற்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், மஹிந்த அமரவீர தலைமையில் தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன ஆகியோர் பங்கேற்றனர்.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இழுபறி நிலை காணப்பட்டதை அடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பசில் ராஜபக்ச தலைமையில் இன்றைய பேச்சு இடம்பெற்றது.

இன்றைய பேச்சுவார்த்தை வெற்றிகரமான இடம்பெற்றுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சந்திப்பதற்கு இன்றைய பேச்சில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.