ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிறுத்தக் கூடிய வலுவான வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியின் தெரிவு சரியானது எனவும் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தை ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும். குதிரையுடன் ஓட்டப் பந்தயத்தில் ஓட மற்றுமொரு குதிரையை பயன்படுத்த வேண்டும்.
அதனை விடுத்து கழுதையை பயன்படுத்துவதில் பிரயோசனமில்லை எனவும் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
1 கருத்துரைகள்:
அப்போ நம்ம ரனில்அப்பா கழுதையா
Post a Comment