August 20, 2019

இலங்கையும், இம்ரான்கானும்...!!

ஆரம்பத்திலேயே ஒரு சின்ன விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் என்பது கொஞ்சம் வித்தியாசமான நாடு. இலங்கையை எல்லாம் அதோடு ஒப்பிட்டால் நாம் எவ்வளவோ மேல்.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவமொன்றை கேட்டால் யாரும் பதறியடித்துக் கொண்டு ஐயோ! அம்மா என்றெல்லாம் சப்தமிட்டு தலையில் அடித்து கொண்டு அங்கலாய்ப்பதில்லை. குண்டுகள் வெடிப்பதெல்லாம் அங்கு மீம்ஸ் போஸ்ட் வாசிப்பது போன்று சர்வசாதாரணம்.
லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை கோத்திர சண்டைகள் எல்லாம் அங்கு வழமையான வாடிக்கைகள். 
இது யாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் 30 வருடங்கள் இராணுவ ஆட்சியில் இருக்கும் நாடு பாகிஸ்தான்.
ஸுல்பிகார் அலி பூட்டோ, பெனாசீர் பூட்டோ , பாத்திமா பூட்டோ, முர்டஸா பூட்டோ என்று ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்யும் குடும்ப ஆட்சி ஒரு பக்கம்.
அய்யூப் கான்,ஸியாஹுல் ஹக், முஷாரப் என்று இராணுவ சர்வாதிகரிகளின் ஆட்சி ஒரு பக்கம்
என்னதான் ஊழல், அராஜகம், அட்டூழியம் நடந்தாலும் அவற்றை பற்றி அக்கறையே இல்லாமல் திரும்பவும் பழைய ஆட்சியாளர்களுக்கே வாக்களிக்கும் மக்கள் ஒரு பக்கம்.
ஜனநாயகம், சமூக நீதி, கருத்து சுதந்திரம், சமத்துவம், வெளிப்படைத்தன்மை உரிமைகள்...வெண்டைக்காய், புடலங்காய் என்று எதுவுமே அங்கு வேலைக்காகாது. Only ஊழல் தான்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இம்ரான்கான் அரசியலுக்குள் நுழைகிறார்.
உலகமே காரித்துப்பிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் டீமை 1992 ஆம் ஆண்டு மொத்த உலகமே திரும்பி பார்ப்பக்க வைத்தவர் தான் இம்ரான்கான். 
ஒரே நாளில் முழு மொத்த பாகிஸ்தான் மக்களினதும் மனதிலும் இம்ரான்கான் பெயர் மாத்திரம் தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இம்ரான்கான், இம்ரான்கான், இம்ரான்கான்......
1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தஹ்ரீகே இன்சாப் ( நீதிக்கான பாகிஸ்தானிய கட்சி) என்ற கட்சியை தொடங்கினார் இம்ரான்கான். 
என்னதான் லெஜன்ட், வேற லெவல் மனிதன் என்று மக்களின் மனதில் இருந்தாலும் அரசியல் என்று வந்துவிட்டால் மக்கள் எப்போதும் எல்லா நாட்டிலும் ஒன்று தான். 
ஊழல்வாதிகளுக்கு தான் வாக்காளிப்பார்கள்.
1997 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட லெஜன்ட், சூப்பர் ஸ்டார் இம்ரான்கானுக்கு கிடைத்தது........ clean balled. ஒரு ஆசனம் கூட கிடையாது.
அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு மீண்டும் 5 வருடங்களுக்கு பின்னர் போட்டியிட்டால் இம்ரான்கானுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பில் பெரும் முன்னேற்றம். கிடைத்ததே ஒரே ஒரு ஆசனம் தான்.
என்ன மக்கள் இவர்கள், அவ்வளவு அவர்களுக்காக செய்த ஒரு லெஜன்ட், ஒரு ஹீரோவை இதைவிடவா அவமானப்படுவார்கள்.
இம்ரான்கான் உடைந்து போகவில்லை, நம்பிக்கையிழந்து அரசியல் வாழ்விலிருந்து விலகி ஓடிவிட வில்லை.
எழுந்து நின்றார். அவமானப்பட்டார், 2007 இல் இராணுவ சர்வாதிகரி முஷரப்பின்னால் சிறைக்குள் சென்றார். பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் ஊர்வலத்தில் மாணவர்களிடம் அடிவாங்கினார். 
ஆனாலும் ,
சற்றும் இம்ரான்கான் தளரவில்லை.
ஊர் ஊராக சென்றார், மக்களிடம் பேசினார். தலிபான்களோடு பேச்சுவார்த்தைக்கு செல்வதே சிறந்த தீர்வென்றார். அமெரிக்காவை கண்டித்து அறிக்கை விட்டார். எல்லோருக்கும் சமத்துவம் வேண்டும் என்றார். சிறுபான்மையினருக்கு ஆதரவளித்தார்.
22 வருடங்களுக்கு பின்னர் இம்ரான்கான் வேறொரு மனிதராகவே மாறி விட்டார். 
2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் வரலாற்றிலே இத்தனை வருடங்கள் எந்தவொரு தனிக்கட்சியும் எடுத்தில்லாத வாக்குகளை இம்ரான்கானின் கட்சி எடுத்தது. ஒரே போடாக எல்லாருக்கும் ஷாக் கொடுத்தார். 17 மில்லியன் வாக்குகள் .
இம்ரான்கானின் கதை ஏன் நமக்கு இப்போது.... இம்ரான்கான் என்று எழுதப்பட்ட ஒவ்வொரு இடங்களிலும் jvp என்று போட்டு வாசித்து பாருங்கள் விஷயம் துலங்கும். இம்ரான்கான் பாகிஸ்தானில் பட்ட கஷ்டங்களை தான் ஜேவிபியும் கண்டிருக்கிறது. 
32 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டு மிகப் பெரும் சக்தியாக வளர்ந்து விட்டது.
இது தான் சரியான தருணம், இது தான் சரியான முடிவெடுக்க வேண்டிய இடம்.
ஊழல்வாதிகளால் ஆளப்பட்டு ஆளப்பட்டு உணர்ச்சியே இல்லாமல் ஆகி விட்டோம். ஊழலில்லாத தேசத்தை கொஞ்சம் பார்க்கலாம். உங்கள் வாக்கு யாருக்கு.....
-அஹமது அல்தாப் 

12 கருத்துரைகள்:

பாங்கிஸ்தானை பற்றி எழுதுவதியவை 100% சரி.

Ahmadu Althaf: article vasikradku nalla than irukki but imran khan is Muslim Paskitan is 100% Islamic country so avaru minority ku adaravlittar but JVP muslimgalin madha sudanthirathai kudukkuma? avargal kolgaye communism..Ellarokum teriyum communist nadugal islatku ediranadu example CHINA. but adukaga na onnum JVP ku againts illa. ellam madangai madithu democratic ku madippu kudukra,matram ondari edirparkindra Ilangai kudi maganil nanum oruvan...

WE VOTE TO JVP.... JVP....JVP..

Your correct wonderful article

I’ve observed history of three mainstream political parties viz UNP, SLFP, JVP. Unfortunately all three parties have blood stains in their hands. Also I’ve seen inter connections among them and everything happens according to their pre planned agenda. Their only interest is how to fool the people, stay in politics and earn in billions. According to Forbes report among ten richest politicians in Sri Lanka, 1st MR with US 18 billion, 3rd My3 with US $ 10.4 million, 8th Anura Kumara Dissanayaka with US $ 130 thousand and 10th Ranil with US $ 60 thousand.

Now it’s up to you to decide who’s the better ruler of this country.

The writer's view on Pakistan is very weak and unfair. because, they have multiple fold of positive than their false...?

Hello Althaf and Ajan,
where you live in during the past,yes here no bomb blast,no abduction of people and students,no corruption,No Masjid killing,no train bomb, no clergy killing, No mass murder of(800) policemen,No ransacked of central bank. Self sufficient in rice production and exporting Basmati to other countries.Corrupt politicians are jailed here.No Rape, no prostitution,no Ava group, Yes we are living in paradise.before you giving an opinion to the media, should think the surroundings and the reasons for why the muslim & arab countries change so much bad. only because of the YEHUDI, NAZARANI'S coupe to destroy the Islamic world for centuries of years. without knowing these simple theory..Ex: Afganistan,pakistan, Syria, yemen etc.

@truth_won,
Its a big joke that you still believe that the Muslim Countries and communities are being destroyed by the Yehudi and Nazara. A BIG NO!!! They are being destroyed by the same Muslims. Because, everyone need leadership and each starts their own party or propaganda.

JVP கு வக்காலத்து வாங்க பாகிஸ்தானை பற்றி தப்பு தப்பா எழுத வேணாம்.எங்கு குண்டு வெடித்தாலும் மக்கள் பதருவாங்க ஐயோ அம்மா என்றெல்லாம் கத்துவாங்க... ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா?? இவ்வாறு கீழ் தரமாக கருத்து பதிய வேண்டாம்.

@AbuNuha, பாக்கிஸ்தானில் மட்டுமல்ல, அனேக முஸ்லிம் நாடுகளிலும் இதே பிரச்சனை தான்.

“சும்மா” சின்னக் கதை ஒன்னு சொல்றேன். எப்பிடித்தான் தலை குத்தனா நாங்க நின்னாலும் இடிச்சு முறிச்சுப் போட்டாலும் தமிழர்களாலோ இல்லாட்டி முஸ்லிம்களாலோ இந்நாட்டின் ஜனாதிபதியாக வரவே முடியாது. அரசியலமைப்பை விடுங்கள். சிங்கள மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவே மாட்டார்கள். இவ்வளவு காலமும் யானை இல்லாட்டி கை (ஏதோ) கை இல்லாட்டி யானை இப்பிடித்தான் நாங்க வாக்களிச்சு வாக்களிச்சு கொஞ்ஞப் பேரை சல்லிக்காரனாக்கியதுதான் மிச்சம். ஆனது கண்டதும் நடந்ததும் ஒன்னுமே இல்லை. இந்த ரெண்டு கட்சியும் சேர்ந்து செஞ்ச சேவை; இனக்குரோதங்கள், மதக்குரோதங்கள், நாட்டின் பொருளியல் அழிவு பலரை பணமுதலைகளாகவும் அதேபோல் இன்னும் பல முதலாளிகளை பிச்சைக்காரர்களாகவும் மாற்றியதுதான் மிச்சம். அது மட்டுமல்லாமல் ரௌடிக் கலாசாரத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியதனையும் குறிப்பிடலாம். நாங்க ஒரு பிள்ளையைப் பெற்றால் அது தன்ட பாட்டுக்கு வளரும். அது மாதிரியே நாடும் தன்ட பாட்டுக்கு வளர்ந்து போகின்றது. ஆனால் மேலே சொன்ன காடைத்தனம் ரௌடித்தனம் சண்டித்தனம் இவைகள் எல்லாம் இயல்பாக வளரக்கூடியவை அல்ல. ஒருவரால் அல்லது பலரால் கடுமையாக திட்டமிட்டு வளர வைக்கப்படுகின்றவை. சுதந்திரமடைந்து 70 வருடங்களா இந்த நாட்டில் என்ன வளர்ந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களில் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் எங்களது ஒரு வாக்கும் மிகவும் பெறுமதிமிக்கவை. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் எங்கள் வாக்குக்கு எந்த மதிப்பும் இல்லை. நாங்கள் மைத்திரி அவர்களை ஜனாதிபதியாக்கினோம். அதில் சந்தேகமே இல்லை. என்ன நடந்திச்சு. சொன்ன மாதிரி சிறுபான்மையினரின் அவலங்கள் நீக்கப்பட்டனவா? இன்று யார் ஜனாதிபதி? யார் பிரதமர்? பொலிஸ் மாஅதிபர் யார்? இராணுவத் தளபதி யார்? நீதிபதிகள் யார்? என்றுகூட நாடு போகும் அவசரநிலையில் ஒன்னும் புரியவில்லை. எங்கட ஊர்ல சில ஆட்கள் அத்துரலியதான் ஜனாதிபதி! ஞானசாரதான் பிரதமர்! சங்கரத்னதான் பிரதிப் பிரதமர்! னு சொல்றாங்க. யார் யார் எல்லாமோ ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள். சிங்களவர்கள் தமிழர்களுடன் சண்டை பிடிக்கனும்னா முஸ்லிம்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் முஸ்லிம்களுடன் சண்டைபிடிக்கனும்னா தமிழர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றனர். யார் ஆண்டாலும் இதில் ஒன்னும் எங்களுக்குப் பங்கே இல்லை என்பதுபோல்த்தான் தெரிகின்றது. . சில சந்தர்ப்பங்களில் அரசியல் ஸ்டண்ட்ஸ் ஆங்காங்கே அரங்கேறினாலும் எங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்ல. என்ன சொல்ல வருகின்றேன் என்றால் இந்த ரெண்டு குழுவும்தான் தொடர்ந்து ஆட்சிக்கு வந்து; பேயாட்டம், குரங்காட்டம், எலியாட்டம், பூனையாட்டம்னு ஆடிக்கிட்டுப் போராங்க. ஏன் நாங்க இந்த முறை மாத்திரம் வேற மாதிரி யோசிக்கக்கூடாது. பரீட்சார்த்தமா JVP க்கு ஆதரவு கொடுக்க முயற்சிப்பது. பேச்சு வார்த்தை நடாத்திப் பார்க்கிறது. எங்ககிட்ட எவ்வளவோ முன்னுரிமைப்படுத்த வேண்டிய பிரேரணைகள் இருக்கின்றன. காரணகாரியத்தோட அதையெல்லாம் அவங்ககிட்ட சொல்லி முடியுமான்னு கேட்கிறது. இவற்றையெல்லாம் படிப்படியாகத் தீர்க்க காலவரை மூலம் செய்ய முடியுமான்னு கேட்கிறது. இதை நாங்களும் பரீட்சார்த்தமா முயற்சி செய்தா எப்படி இருக்கும். ஓன்னும் கிடைக்காட்டாலும் பரவாயில்லை. ஏன்னா நாங்களும் காலம்காலமா ஒப்பந்தத்துக்கு மேல ஒப்பந்தம் போட்டுக்கிட்டுத்தான் வாரோம். எதுவும் நடந்த மாதிரி இல்லை. ஏங்கட அரசியல்வாதிகள்தான் மேலமேல போறாங்க. நாங்க அதே இடத்திலதான் இன்னமும் இருக்கோம். ஏன்னா எங்கட அரசியல்வாதிகள் எங்களை எழும்ப விட்டாதானே. மட்டுமில்ல; எங்கட அரசியல்வாதிகள் இன்னமும் மேலமேலதான் போகப்பாப்பாங்க. ஏன்னா இவங்கட கூத்துக்கும் கும்மாளத்திற்கும் JV

Post a comment