Header Ads



"முஸ்லிம்களை ஒரு வழி பண்ணுவது"


- Ashroff Shihabdeen -

“நாட்டின் பாதுகாப்பு” என்ற படத்தை ஓட்டி ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள். இதனடிப்படையில் பெரும்பான்மை இன வாக்காளர்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் உள்ளார்ந்த தகவல் என்னவெனில் முஸ்லிம்களை ஒரு வழி பண்ணுவது என்பதுதான்.

ஒரு சில வேட்பாளர்களின் ஆங்காங்கு தெரிவிக்கும் கருத்துக்களிலும் வேட்பாளர்களோடு நல்லதொரு அமைச்சை எதிர்பார்த்து இணைந்திருக்கும் ஒரு சில பெரும்பான்மை அரசியல்வாதிகளின் அறிக்கைகளிலும் இதைத்தான் என்னால் உணர முடிகிறது!

இந்தப் படத்தை ஓட்டுவதில் பல நன்மைகள் அவர்களுக்கு உண்டு. நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் விலை வாசி மற்றும் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திருப்பி விடுவதன் மூலம் சுகபோகமாக வாழ்ந்து விட்டுப் போவதற்கு இந்தப் படம் மிகச் சிறந்தது.

வருடாவருடம் இன்னொரு ஆயிரம் கோடியால் பட்ஜட்டில் துண்டு விழுவதைத் தடுக்க, வேலையில்லாப் பிரச்சனை தீர்க்க, ஆகக்குறைந்தது அன்றாட உணவுப் பொருட்களைக் கட்டுப்பாட்டு விலைக்குக் கொண்டு வர யோசனைகளை யாராவது முன் வைக்கிறார்களா என்பதை அவதானியுங்கள்!

நாட்டை மேம்படுத்துவோம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் எல்லாவற்றையும் புதைத்து விட்டு ஏதோ எண்ணெய்க் கிணறுகளால் நிரம்பி வழியும் தேசத்தைப் பாதுகாக்கப் போவது போல்தான் அறிக்கை விட்டு்க் கொண்டும் பேசிக் கொண்டிருப்பார்கள். விஞ்ஞாபனங்களும் அப்படித்தான் இருக்கும்!
ஜயவேவா!

2 comments:

  1. 2020 is for JVP,JVP,JVP or SDP,SDP, SDP

    ReplyDelete
  2. இதற்கு எல்லாம் சரியான தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தில் இல்லாமைதான் காரணம். தேர்தல்களில் வாக்களிக்கும் முஸ்லிம்கள்கூட பிரதேசவாதம் பார்க்கின்றமையின் காரணமாக தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி மாகாணசபை உறுப்பினர்களும் இதனை முழு நேரத் “தொழில்” ஆகவே செய்கின்றனர். தொழில் வாய்ப்பு, ஒப்பந்த வேலைகள் என்பவற்றின் நிலைமைகளும் அவ்வாறே. இப்படியே போனால் இவர்கள் எப்படி சமூகத்திற்கு சேவை செய்யப் போகின்றார்கள். இவர்களால் நியமிக்கப்படும் அரச ஊழியர்கள்கூட தான் நியமனம் பெறுவதில் உதவிய பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பெரும் கில்லாடிகாளகவே இருக்கின்றனர். இவை எல்லாம் முஸ்லிம் வாக்காளர்கள் செய்யும் பெரும் தவறுகள். பொருத்தமான தலைவர்களைத் தெரிவு செய்வதில் அவர்கள் மிகவும் பராமுகமாக இருக்கினறனர். அதனால் வரக்கூடிய பலாபலன்களை அவர்களே அனுபவிக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.