Header Ads



காதி நீதிமன்றத்தால் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில், வெளிப்படுத்திய பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு

முஸ்லிம்களின் காதி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து தகவல் வெளியிட்டிருந்த வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஜபார் ஃபஸீனா என்ற பெண், இன்றைய தினம் பதுளை காவல்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

காதி நீதிமன்றத்தின் பிரதிநிதி ஒருவரினால், குறித்த பெண்ணுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே காவல்துறையினர் அவரை அழைத்துள்ளனர்.

தற்போது, தனது தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் ஃபஸீனா, 10 வயதில் முஸ்லிம் ஆண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கணவனின் முறையற்ற தொடர்பு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பதுளையில் உள்ள காதி நீதிமன்றில் குறித்த பெண் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது, தனக்கு பெரும் அநீதி நிகழ்ந்தாக அவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

தனது மகளின் பராமரிப்புக்காக 3000 ரூபா வழங்கப்படுகின்ற நிலையில், அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்தனர் என்றும் குறித்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

தாய் இல்லாத காரணத்தினால், 10 வயதிலேயே தனக்கு திருமணம் செய்துவைத்தனர் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த தகவல் வெளியானதையடுத்து, காதி நீதிமன்ற காதி ஒருவரினால், அந்தப் பெண்ணுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இன்றைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக பதுளை காவல்துறைக்கு சென்றபோது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த குறித்த பெண், காதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக தனக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட அநீதியையே தான் வெளிப்படுத்தியதாகவும், குழந்தையின் பராமரிப்பு செலவு உட்பட, தனது உடைமைகளைப் பெற்றுத்தருமாறே வழக்குத் தாக்கல் செய்திருந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வழக்கு, கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டபோதும், அது தொடர்பாக தனக்கு இதுவரை ஒரு கடிதம்கூட கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விவாகரத்து பத்திரத்தில் தான் கையொப்பமிடவில்லை என்றும், காதிதான் விவாகரத்தை வழங்கினார் என்றும், பெண் ஒருவரின் கையொப்பமின்றி, காதியினால் விவாகரத்து வழங்கமுடியும் என கூறப்பட்டதாகவும் ஃபஸீனா தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்யப்படும் போதும், விவாகரத்து பெறப்படும் போதும் பெண்களின் கையொப்பம் பெறப்படுவதில்லை.

அப்துல் கரீம் என்பவரே இந்த விவாகரத்தில் கையொப்பமிட்டுள்ளார் என்றும், குறித்த காதி கடந்த மாதம் 12 ஆம் திகதி கரீமின் இல்லத்திற்கு மதிய நேர விருந்துபசாரம் ஒன்றுக்கு சென்றுள்ளார் என்றும், திருமணம் செய்து வைக்கப்பட்டமைக்காகவே அந்த உபசாரம் வழங்கப்பட்டதாகவும் அப்துல் ஜபார் ஃபஸீனா தெரிவித்துள்ளார்.

மனைவியையும், குழந்தைகளையும் கைவிடும் நிலையே இந்தச் சட்டத்தில் உள்ளதாகவும், காதி நீதிமன்றம் தங்களுக்கு அவசியமில்லை என்றும் அந்தப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. first of all better to check whether this lady is a Muslim.

    ReplyDelete
  2. இந்த விடயத்தில் அந்த காதியை கட்டாயம் உலமா சபை,மற்றும் Muslim புத்தி ஜீவிகல் விசாரணை செய்ய வேண்டும்.அந்த விசாரனை இடத்தில் இந்த பெண்ணும் இந்த பெண்ணின் திருமணத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைக்க வேண்டும்.அதே நேரத்தில் இந்தப் பென்னின் தந்தையாம் முதல் குற்றவாளி ஏனேனில் 10 வயதில் தன் பிள்ளையை திருமணம் முடித்து கொடுக்குமலவுக்கு எவ்வளவு பெரிய ஒரு மிருகமாக இருந்திருப்பான் அவன்.நிச்சயம் இந்த விடயம் தீவிர விசாரனைக்குட்படுத்தப்பட்டு தவறு இழைத்தவர்கலுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. அதே வேளை இந்த பெண் செய்த மோசமான வேலை இந்த விடயத்தை பணத்துக்காக இனவாத சக்திகலிடம் விற்பனை செய்தது.தனக்கு நீதி தேவை எனில் பொலிஸ் நிலையம் உள்ளது,நீதிமன்ரம் உள்ளது.எத்தனையோ இலவச Muslim சட்ட அமைப்புக்கள் உள்ளன அங்கேயெல்லாம் போகாமல்,எப்பவோ நடந்த விடயத்தை பணத்துக்காக இனவாதிகலிடம் விற்ற இந்த பெண்ணும் ஒரு மோசமானவர்தான்.

    ReplyDelete
  4. அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும்தான் இருக்கின்றான். நாங்கள் செய்யும் தவறுகள் திரும்பவும் எங்களையே தாக்கும் என்ற நீதியினை எல்லோரும் நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும். நீதி பொல்லாதது. அநீதி அப்படியல்ல. செய்யச் செய்ய இன்பமூட்டுவது. அல்லாஹ்வின் கேள்விகளுக்கு உங்களுக்குப் பதிலளிக்க முடியுமாக இருந்தால் தாராளமாக பெண்கள் விடயத்தில் தப்பும் தவறும் செய்து கொண்டே இருங்கள். அதிக விளக்கம் தேவையில்லை. உதாரணங்கள் தேவையாயின் இந்தப் பத்தியினூடாகவே தரமுடியும். அல்லாஹ் எங்கள் அனைவரையும் பெண்களுக்கு அநியாயம் இழைப்பதினின்றும் காப்பானாக. ஆமீன்.

    ReplyDelete
  5. furkanhaj (AKP)பூரண விசாரணைக்குப்பின்னரே என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொணடிருக்கிறேன் என்ற தக்வா(இறையச்சம்)ஒவ்வோரிடமும் இருந்து விட்டால் தவறு நேர வழியேயில்லை.

    ReplyDelete
  6. இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்துப்பெண்களும் முறைப்பாடு செய்து இஸ்லாம் என்று எதையோ ஒன்றைச் சொல்லித்திரிவோருக்கு விழிப்பூட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.