Header Ads



ராஜபக்ச சகோதரர்களிடம் அடைக்கலம் தேடும் மைத்திரி - நாடு திரும்பியவுடன் முக்கிய தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதிருக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்குமிடையில் நடந்த சந்திப்பின்போது இது தொடர்பில் பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவை தெரிவிக்கும் பட்சத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமது எதிர்கால அரசியல் தொடர்பான உத்தரவாதம் ஒன்றை ஜனாதிபதி மைத்ரி கோரியதாகவும் ,அது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியுடன் பேசி முடிவெடுக்க மஹிந்த உறுதியளித்ததாகவும் தெரிகிறது.

கம்போடியாவில் இருந்து நாடு திரும்பிய கையோடு ஜனாதிபதி மைத்ரி இது தொடர்பில் அடுத்தகட்ட பேச்சுக்களை நடததவுள்ளாரென கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இல்லாத சமயத்தில் எதிர்காலத்தில் அவருக்கு விசேட சிறப்புரிமைகளை வழங்குவது பற்றி ஆராயப்பட்டு வருவதாக மேலும் அறியமுடிந்தது. TN

3 comments:

  1. மாட்டு மடையன் !

    ReplyDelete
  2. அட்டையை தூக்கி மெத்தைலே வெச்சாலும் ,சருகுகான் பூரும் !

    ReplyDelete
  3. Useless presedent ever in Sri lanka history.

    ReplyDelete

Powered by Blogger.