Header Ads



ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கரு - ரணில் தீர்மானம் உடனடி பிரச்சாரத்திற்கும் ஆயத்தம்

ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக சபாநாயகர் கரு ஜெயசூரியவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி கரு ஜனாதிபதி வேட்பாளராகவும் ரணில் அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளனர்.

பிரசாரத்திற்கு தயாரானார் கரு !

வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய அதற்கான பிரச்சார வேலைகளை மறைமுகமாக ஆரம்பித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக போட்டோஷூட் பலவற்றில் அவர் கலந்து கொண்டார். அத்தனகல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதி மற்றும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதி ஆகியவற்றில் நடந்த போட்டோஷூட்களில் சபாநாயகர் கரு கலந்து கொண்டார். அந்த படங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளன. அதேபோல நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கும் அவர் செல்லவுள்ளார்.

பதவி இராஜினாமா !

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி அவர் சுயாதீன ஒருவராக போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு கருவை பிரதமர் ரணில் கேட்டதையடுத்தே இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன.

முன்னதாக கடந்த அரசியல் நெருக்கடி கடந்த வருடம் ஏற்பட்டபோது கரு ஜயசூரிய அதனை மிக இலாவகமாக கையாண்டதால் அவருக்கு அனுபவ முதிர்ச்சியும், அரசியல் ஞானமும் இருப்பதாக பிரதமர் கருதுவதாக சொல்லப்பட்டது. tn

No comments

Powered by Blogger.