Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் யார்? ஐதேகயின் தாமதமும், இழுபறியும் நீடிக்கிறது

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட இழுபறி நிலைமை தொடர்கிறது.

நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமொன்று நடந்தது.அதிலும் முழுமையான இணக்கப்பாடு ஏற்படவில்லை. அந்த கட்சித் தலைவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு வரும் சனிக்கிழமை கூடி ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டணி குறித்து ஆராய்ந்து கூட்டணி அறிவிப்பு திகதி , வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும். வேட்பாளர் அன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டாலும் அது தொடர்பான அறிவிப்பு கூட்டணி அறிவிப்பின்போதே வெளியிடப்படும்.

கரு ஜயசூரிய , சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்பட பரிசீலனை செய்யப்படும் அதேசமயம் சரத் பொன்சேகாவும் அதனை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்பட்டால் ஐ.தே.க சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி அடுத்த அரசியல் நகர்வுகளுக்கு செல்லலாமென தெரிகிறது.

இதற்கிடையில் சஜித்தின் ஆதரவு எம் பிக்கள் 16 ஆம் திகதி கண்டியிலும் 23 ஆம் திகதி மாத்தறையிலும் கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளனர். tn

No comments

Powered by Blogger.