Header Ads



சவூதி அரேபியாவில் இன்று, வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சவூதி அரேபியாவில் பெண்கள் தற்போது ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி தனித்து வெளிநாடு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று -02- அறிவிக்கப்பட்ட புதிய விதியின் கீழ், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அங்கீகாரமின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதன்படி ஆண்களுக்கு சமமாக, 21 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இப்போது அந்த நாட்டில் கடவுச்சீட்டு மற்றும் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அதேநேரம் குழந்தை பிறப்பு, திருமணம் அல்லது விவாகரத்தை பதிவு செய்வதற்கான உரிமையை 'அரச ஆணை' பெண்களுக்கு வழங்குகியுள்ளது.

பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வேலைவாய்ப்பு பொறிமுறையும் அந்த ஆணை உள்ளடக்குகின்றது.

இந்த பொறிமுறையின் கீழ், அனைத்து குடிமக்களுக்கும் பாலினம், இயலாமை அல்லது வயது அடிப்படையில் எந்த பாகுபாட்டையும் எதிர்கொள்ளாமல் வேலை செய்ய உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. Very good now our salafi groups will pour tears over this reformation.. What about AJJU? who is adamant to not to make any changes in Personal law of Muslims in SL? what a contrasting world is this?

    ReplyDelete
  2. ஒரு ஹராம் ஹலாலாக்கப்படுகின்றது

    ReplyDelete
  3. ஒரு ஹராம் ஹலாலாக்கப்படுகின்றது

    ReplyDelete
  4. இலங்கையில் இஸ்லாம் வருவதற்கு எடுத்த காலம் எடுக்கும் இதனை விளங்கிக் கொள்வதற்கு.

    ReplyDelete
  5. Why you need this photo, these girls not related to Saudi government, please avoid unnecessary graphics

    ReplyDelete

Powered by Blogger.