Header Ads



வீரச்சோலை முஸ்லீம் மஹா, வித்தியாலயத்திற்கு ஒரு அதிபரை தாருங்கள் - பெற்றோர்கள் உருக்கமான வேண்டுகோள்

-முஹம்மட் ஹாசில்-

கெபித்திகொள்ளாவ கல்வி வலயத்தின் முன்னனி பாடசாலைகளில் ஒன்றான வீரச்சோலை முஸ்லீம் மஹா வித்தியாலயம் கடந்த மே மாதம் முதல் அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றமையால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் கடமையாற்றி வந்த அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோரை ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானுடன் தெடர்புடையவர்களா எனும் சந்தேகத்தின் பேரில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப் பாடசாலைக்கு புதிய  அதிபர் ஒருவர் நியமிக்கப்படாது பாடசாலையின் அதிபர் பதவி வெற்றிடமாகக் காணப்படுகின்றது.

இவ்வாறு மூன்று மாதங்களாக அதிபர் அற்ற நிலையில் குறித்த பாடசாலை இயங்கி வருவதால் கற்றலில் ஈடுபடுகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கெபித்திகொள்ளாவ கல்வி வலயத்தில் கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த பலனும் இல்லை கிடைக்காமல் உள்ளனர்.

அதிபர் அற்ற நிலையில் காணப்படும் இப்பாடசாலையில் தங்களின் பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு இதற்கான தீர்வை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் பெற்றுத் தரவேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.