Header Ads



சும்மா கூடிக்கலைந்த ஐதேக பாராளுமன்றக்குழு கூட்டம் - வேட்பாளர் பற்றி எதுவும் பேசப்படவில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு  இன்று திங்கட் கிழமை கூடியிருந்த நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை.  இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை மீண்டும் ஒரே சந்தர்பத்தில் அழைக்குமாறு  தாம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார். 

இன்று  பிற்பகல் வேளையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூடியது. இதன் போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து  கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும்  அது குறித்து எந்த பேச்சும் இடம்பெறவில்லை. பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக மாத்திரமே கலந்துரையாடப்பட்டது. 

இருப்பினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்காக கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக கோரிக்கையொன்றும் இன்று முன்வைக்கப்பட்டது. இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவையும் பாராளுமன்ற குழுவையும் ஒரே நேரத்தில் அழைத்து கலந்துரையாடலை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  கோரியுள்ளோம். 

அவ்வாறு இவ்வார இறுதிக்குள் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக செயற்குழுவும் பாராளுமன்ற குழுவும் கூடுமாக இருந்தால் வேட்பாளர் குறித்து முக்கிய தீர்மானம்; எடுக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.