Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை, ரணில் நிறுத்த மாட்டார்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்.

“யாப்பின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கும், கட்சியின் தொண்டர்கள் எடுக்கின்ற பெரும்பான்மைத் தீர்மானத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுகின்றது.

“இந்த நிலை தற்போது உச்சத்தை அடைந்திருப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கடிக்கு காரணம் என” திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் கட்சிக்குள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான குழுவினர் இன்றைய தினமும் மாத்தறையில் மக்கள் கூட்டம் நடத்தப்படுகின்றது.

இப்படியான நிலையில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதித்தீர்மானம் எடுக்கின்ற செயற்பாடு இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

எவ்வாறாயினும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நானே ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச இன்றைய பேரணியின் போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Sajith not going to contest for UNP.
    01. Sajith,Mythri, Rajapaksa one party.
    02. Ranil, ......
    03 JVP SDP,.....
    ? Hakeem??? Rishard???


    ReplyDelete

Powered by Blogger.