Header Ads



ஜனாதிபதி வேட்பாளராகுமாறு, எனக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை - பாராளுமன்றத்தில் கரு அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராவதற்கு தனக்கு கோரிக்கைகள் விடுக்கப்படவில்லையென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். தன்னை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் தொடர்ச்சியாக இந்த கேள்வி கேட்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று -23- வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர சபாநாயகர் தனது  பதவியிலிருந்து வெளியேறி ஜனாதிபதி வேட்பாளராகவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக தெரிவித்த போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார். 

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது தயாசிறி ஜயசேகர சபாநாயகர் கருஜயசூரியவின் பெயரை குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்தார்.

இதன்போது சாபாநாயகருக்கும் தயாசிறி ஜயசேகர எம்.பிக்கும் இடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றது. இதனை அடுத்து " நீங்கள் ஏதோவொரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றீர்கள் "என சபாநாயகர் தெரிவித்த நிலையில் ,

அதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர எம்.பி :- அவ்வாறு உங்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் கருத்துக்களை வெளியிடவில்லை அவ்வாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அவற்றை வாபஸ் பெற்றுக்கொள்கின்றேன். என தெரிவித்து மீண்டும்  கருத்தை முன்வைத்து ''நீங்கள் விலகி ஜனாதிபதியாக போவதாகவும் கூறப்படுகின்றது.'' என்றார். 

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தயாசிறி எம்.பி முன்வைத்த கருத்துக்களுக்கு  பதிலளித்த சபாநாயகர், இல்லை அவ்வாறு கோரிக்கை எதுவும் என்னிடத்தில் முன்வைக்கப்படவில்லை என்றார். 

No comments

Powered by Blogger.