Header Ads



கோத்தபாய ஜனாதிபதியாவதை தடுக்க, சகலதையும் அர்ப்பணிப்புடன் செய்வேன் - அமில தேரர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவதில்லை என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அர்ப்பணிப்புடன் செய்வேன்.

கோத்தபாய அண்மையில் தலதா மாளிகைக்கு வழிபாடு செய்ய சென்றிருந்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேல் தலதா மாளிகை மூடப்பட்டிருந்தது.

இதனால், தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபட வந்திருந்த பக்தர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.

இதனையடுத்து அவர்கள் பலவந்தமாக தலதா மாளிகைக்குள் புகுந்து, வழிபாடுகளில் ஈடுபட்டனர். மேட்டுக்குடி கொலைகாரர்களுக்கு மட்டுமா தலதா மாளிகையில் வழிபாடுகளை செய்ய முடியும்?.

தலதா மாளிகையில் இருந்த சில பிக்குமார் கோத்தபாய ராஜபக்சவை மிகப் பெரிய அரசரை போல் கவனித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அண்மையில் ஒருநாள் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, புனித வெள்ளரச மரம் அமைந்துள்ள இடத்தின் மேல் பகுதியில் வழிபாடுகளில் ஈடுபடும் விதத்தை காண முடிந்தது.

பெண் அந்த இடத்தில் வழிபட சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம்.

அனைத்து பெண்களுக்கும் இவ்வாறு புனித வெள்ளரச மரத்தினை வழிபட இடமளிக்க வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அவரை தோக்கடிக்க தெண்டிக்காமல் நாட்டுக்கு நல்ல ஒரு தலைவரை கொண்டுவர முயற்ச்சி செய்யுங்கள் உங்கள் மார்க்கத்தின் அடிப்படையில்

    ReplyDelete

Powered by Blogger.