Header Ads



அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் தேடுதல், கைது, தடுத்துவைத்தல் தொடரும்

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அமுல்படுத்தப்பட்டது. 

இதேவேளை, நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக என அறிவிக்கப்பட்டது. 

எனினும் நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட நேற்று (23) அறிவித்திருந்தார். 

மேலும், பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2 comments:

  1. அப்படியானால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்தல் என்றால் என்ன என்பதை புரியவில்லை.

    மற்றும் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் மீண்டும் அமுல் படுத்தப்படுமா

    ReplyDelete
  2. Mr Police did you arrest the Terror Politician related to this terror attack 21 April??.
    Please arrest the Terror Politician also... Soooon
    Terror Zahran is dead. Don't leave any Terror is alive. Catch and send him behind bars regardless of any religions..

    ReplyDelete

Powered by Blogger.