Header Ads



கோட்டாபய வழங்கிய, வாக்குறுதியை நம்ப வேண்டாம் - மெலகம் ரஞ்சித்திற்கு கடிதம் அனுப்பிவைப்பு

ஆட்சிக்கு வரும் நோக்கத்துடன் அரசியல்வாதிகள் வழங்கும் வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள கோரிக்கையைத் தமது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றுவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.  

மக்கள் உரிமையை பாதுகாக்கும் மேற்படி அமைப்பு பேராயருக்கு கடிதமொன்றை அனுப்பி இது தொடர்பில் அறிவித்துள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

தங்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், அடுத்து உருவாகப்போகும் தமது அரசாங்கத்தில் பேராயரின் வேண்டுகோளின்படி சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டின் அரசியல்வாதிகளால் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியின் முன்னாள் பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.  

அதனை மேற்படி தாக்குதலின் பின்னர் 22ஆம் திகதி மக்கள் பிரதிநிதியான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார்.  

எனினும், அவர் அது தொடர்பில் தெரிவிக்கையில்:

இதனை மக்களுக்கு அறிவிக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பே எனக் குறிப்பிட்டுள்ளார்.  

ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை அவர் நிறைவேற்றவில்லை.  

நாட்டு மக்களுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்படுமானால், அது தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், காலம் தாழ்த்தாது அதனை வெளிப்படுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டியது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும். அது தொடர்பில் பொறுப்புடன் செயற்படவேண்டியது  அவரின் கடமையாகும். அவ்வாறு அவர் செய்யாது எதிர்கால அரசியல் நோக்கத்திற்காக பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதற்கு இடமளித்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார் என்றே குறிப்பிட வேண்டும்.  

இந்த நிலையில், ஆணைக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் நீங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  

அதனை விடுத்து கோட்டாபய ராஜபக்ஷ உங்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை நம்ப வேண்டாம் அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆணைக்குழுவொன்று நியமித்து அதன் பரிந்துரையைப் பெற்று அதன் மூலம் மாற்று செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பில் நாம் வரலாற்றில் அதிக தடவைகள் கற்றுக்கொண்டுள்ளோம்.  

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் அவர் மனித உரிமையை மீறி செயற்பட்டமை யாவரும் அறிந்தது.  

இதனைக் கருத்திற்கொண்டு, அப்பாவி மக்களின் இரத்தத்தின் மீது எந்த அரசியல்வாதியும் வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்கவேண்டாம் என நாம் உங்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவ்வமைப்பு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.  

மக்கள் உரிமையைப் பாதுகாக்கும் மேற்படி அமைப்பின் பணிப்பாளர் அசேல சம்பத் ஊடகப் பணிப்பாளர் சிரந்த அமரசிங்க ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டு பேராயருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.