August 25, 2019

முஸ்­லிம்கள் பற்­றிய அபிப்­பி­ராயம், சிதை­வ­டைந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­து - அலி சப்ரி

“எமது சமூ­கத்­தி­லி­ருந்து தீவி­ர­வா­தி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தக்­கூ­டிய தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான பொறி­முறை ஒன்றை உரு­வாக்­க­வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் இந்த நாட்டில் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் பாது­காப்­ப­தற்­கான வகையில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­கின்­ற­வர்­க­ளுடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சியம்.’’ மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியின் ஸ்தாபகர் தின விழாவின் சிறப்பு பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் ஸாஹிராக் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரு­மான அலி சப்ரி கூறி­னார்.

கல்­லூ­ரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலை­மையில் கல்­லூ­ரியின் அப்துல் கபூர் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இவ்­வி­ழாவில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

‘‘இந்த நாட்­டி­லுள்ள இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு நீண்­ட­தொரு வர­லாறு உண்டு. கடந்த 11 நூற்­றாண்­டு­க­ளாக அவர்கள் சகல சமூ­கங்­க­ளு­டனும் சமா­தா­ன­மா­கவும் சட்­டத்தைப் பின்­பற்றி நடக்­கின்ற சமூ­க­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் பெயரைச் சுமந்த குறிப்­பிட்ட சில தீவி­ர­வா­திகள் நடாத்­திய பயங்­க­ர­வாதத் தாக்­குதல் கார­ண­மாக முஸ்­லிம்கள் பற்­றிய அபிப்­பி­ராயம் சிதை­வ­டைந்­துள்­ளமை யானது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எனவே நாம் எம்­மோடு வாழக்­கூ­டிய ஏனைய சமூ­கங்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுப்­ப­தற்­கான பொறுப்பு எமது சமூ­கத்தின் மீதுள்­ளது.

இதற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாக தனித்து ஒதுங்கி வாழும் நிலை­யி­லி­ருந்து வெளி­வந்து ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­துடன் உற­வையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய வகையில் எமது எதிர்­கால செயற்­பா­டுகள் அமை­ய­வேண்டும்.

இலங்­கையில் பல்­வேறு சமூ­கங்­க­ளு­ட­னான சக­வாழ்­வையும் சக உற­வையும் மேம்­ப­டுத்­தக்­கூ­டிய கல்­வியை விருத்­தி­செய்­வ­தற்கு கடந்த காலங்­களில் ஸாஹிரா கல்­லூரி செயற்­பட்­டது போல் எமது கல்­வியை முன்­னெ­டுத்­துச்­செல்ல வேண்டும்.

ஸாஹி­ராவின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ. அஸீஸ் 1948 முதல் 1961 வரை அதி­ப­ராக இருந்த பொற்­கா­லப்­ப­கு­தியில் ஸாஹிரா படிப்­ப­டி­யாக கல்வித் துறையில் கீர்த்தி மிகு மத்­திய நிலை­ய­மாக மாறி­யது.

இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் –தமிழ் –சிங்­கள சமூ­கங்­களைச் சேர்ந்த சகல மாண­வர்­க­ளுக்கும் ஒரே மாதி­ரி­யான சேவையை வழங்கக் கூடிய பாட­சா­லை­யாக வளர்ச்­சி­ய­டைந்­தது. அது மட்­டு­மன்றி மலே­சியா, கென்யா, பாகிஸ்தான் போன்ற வெளி­நாட்டு மாண­வர்­க­ளும்­கூட இங்கு வந்து கல்­வி­கற்றுப் பய­ன­டைந்­தனர்.

சாதா­ரண முஸ்லிம் பாட­சாலை என்ற நிலை­யி­லி­ருந்து தேசியப் பாட­சா­லை­யாக மாற்றம் கண்ட ஸாஹிராக் கல்­லூ­ரியின் கல்­வித்­தர மேம்­பாட்­டையும் சமூ­கங்­க­ளி­டை­யி­லான பாகு­பா­டற்ற சேவை­யையும் அக்­கா­லப்­ப­கு­தியில் பல்­க­லைக்­க­ழத்­துக்குத் தெரி­வான பல்­லின மாண­வர்­களின் எண்­ணிக்­கை­யி­லி­ருந்து அறிந்து கொள்­ளலாம்.

இக்­கா­லப்­ப­கு­தியில் இலங்­கை­யி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பீடங்­க­ளுக்கு அனு­மதி பெற்ற மொத்த மாண­வர்­களின் தொகை 138 ஆகும். அனு­மதி பெற்ற இம்­மா­ண­வர்­களில் 80 பேர் இஸ்லாம் மாண­வர்கள், 37 பேர் சிங்­கள மாண­வர்கள், 21 பேர் தமிழ் மாண­வர்­க­ளாவர். சத­வீத அடிப்­ப­டையில் முஸ்லிம் மாண­வர்கள் 57 சத­வீ­தமும் சிங்­கள மாண­வர்கள் 27 சத­வீ­தமும் தமிழ் மாண­வர்கள் 15 சத­வீ­த­மா­கவும் இருந்­தனர். இந்த உதா­ர­ண­மா­னது உண்­மை­யி­லேயே இலங்­கை­யி­லுள்ள சகல சமூ­கங்­க­ளையும் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் ஒரு பிர­தா­ன­மான முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய முஸ்­லிம்­களால் நடத்­தப்­பட்ட ஒரு கல்வி நிறு­வ­ன­மாகத் திகழ்ந்­தது.

எனவே, அக்காலத்தில் ஸாஹிராக் கல்லூரியானது முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டது போல் எமது கல்வி நடவடிக்கைகளிலும் ஏனைய நடவடிக்கைகளில் சகல சமூகங்களுடன் நல்லுறவை விருத்தி செய்யக்கூடியவாறு எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும்’’ எனக் குறிப்­பிட்டார். மேலும் இந்­நி­கழ்வில் ஸாஹிராக் கல்­லூ­ரியின் பழை­ய­மா­ணவர்கள், ஆளுநர் சபை அங்­கத்­த­வர்கள் மற்றும் பல்­வேறு பிர­மு­கர்­களும் வெளி­நாட்டுத் தூது­வர்­களும் கலந்து சிறப்பித்தனர்.

1 கருத்துரைகள்:

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்குவாரங்களைப் போன்று பல மடங்கு நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்கும் தறுவாயில் மூச்சு விடவும் முடியாத போதே தாங்கள் விரும்பும் சகவாழ்வுக்கு முஸ்லீங்கள் தயாராகுவார்கள் போல் தான் இருக்கிறது. மற்ற சமூகத்துடன் சேர்ந்து வாழும் நிலைக்கு இஸ்லாமிய இயக்க வாதிகள் இன்னும் தயாரில்லை. வீடுகளுக்குச் சென்று பள்ளிவாசலுக்கு அழைக்கும் ஒரு இயக்கவாதியை கடந்த வாரம் சந்தித்க்க கிடைத்தது ஒரு பேச்சில் அவர் சொன்னார் காபிர்கள் எல்லோரும் நஜீஸ்களாம். அவர் வளர்க்கும் குழந்தைகளும் அந்த மன நிலையில் வளர்ந்தால் நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும். அது போக எமது தவறை நாம் விமர்சனம் செய்யத் தயாரில்லை. தவறைச்சுட்டிக்காட்டினால் அல்குர்ஆன் அல்ஹதீஸிற்கு மாற்றம் செய்வதாக கூறி இயக்க வாதிகள் தகாத வார்த்தை கொண்டு தாக்க முற்படுவார்கள். முஸ்லீம் பெண்களை விமர்சிக்கும் வார்த்தைகளைப்பார்க்கும் போது மதம் எனும் மனநோயால் பாதிக்கப்படடவர்கள் போலிருக்கின்றது. தம் இனத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ முடியாதவர்கள் இ்ன்னொரு இனத்துடன் நல்லிணக்கமா?

Post a comment