Header Ads



அப்பாவிகளை விடுவிக்க, சட்டரீதியாக இறுதிவரை போராடுவோம்...!

கடந்த 23/05/2019 அன்று கொழும்பு வெள்ளவத்தை பொலிசாரால் வெள்ளவத்தையில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புத்தளம் கொத்தாந்தீவைச்சேர்ந்த எனது நண்பன் அசாம் கடந்த 26/05/2019ல் கல்கிஸ்ஸ நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் 22/08/2019 அவ்வழக்கு விளக்கத்திற்கு வந்த போது .............

போலிசார்:- சந்தேக நபர் உடமையிலிருந்த லெப்டொப்பை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம்.அதன் முடிவு வரும் வரை இன்னுமொரு தவணையை வேண்டுகிறோம்.

நீதவான்:- இது வரை விசாரணை செய்ததில் இவருக்கு எதிராக வழக்கை கொண்டு நடத்துவதற்கு ஏதாவது ஆதாரமிருக்கிறதா ?
இல்லாவிட்டால் ஏன் தொடரப்போகிறீர்கள்!

நான்:-முதலாவது B அறிக்கைக்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றவியல் விசாரனணப்பிரிவு விசாரணைகள் அனைத்தும் இந்த சந்தேக நபர் எந்த வித பயங்கரவாத்துடன் தொடர்பில்லையென போலிசார் அறிக்கையில் கூறிவிட்டு இவரிடமிருந்து கைது செய்யப்பட்ட பொருட்களை இராசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புவது உங்களது எமது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.

போலிசார்:- இராசாயண பகுப்பாய்வு அறிக்கைவரும் வரை ஒரு தவணை தாருங்கள்.

நான்:- சந்தேக நபரின் வழக்குப்பொருட்களை போலீசாரே ஆராய்ந்த அதனை விடுவிக்கும் படி தாங்களே கடந்ந வழக்கு தினத்தில் கட்டளை இட்டுருக்கும் போது, பொலிசார் இங்கு பொய் உரைக்கின்றனர். வழக்கை சோடிக்கின்றனர்.எனவே சந்தேக நபரை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்வதுடன் அவரிடமிருந்து கைப்பற்றிய பொருட்கள் அனைத்தும் பொலிசாரிடமே இருக்கின்றன. அவற்றையும் விடுவிக்கவும்.

நீதவான்: எல்லாம் உங்களிடமா இருக்கின்றன(பொலிசாரை நோக்கி).

போலிசார்:- ஆம் எம்மிடமே இருக்கிறது.(அப்பாவியான எனது ஆளை பயமுறுத்தி ஏதாவது கறக்க இருந்த சந்தர்ப்பத்தம் கை நழுவி விட்ட ஏமாற்றப்பட்ட முக பாவனையுடன் கூறினர்).

நீதிவான்:- உடனடியாக சந்தேக நபரை விடுதலை செய்கிறேன்.அத்துடன் வழக்கு பொருட்களை சந்தேகப்பட்ட நபரிடம் ஒப்படையுங்கள்.(என போலீசாரிடம் கூறினார்).

எனது நண்பன் அசாமிடமிருந்த போலிசார் கைப்பற்றிய பொருட்கள.

1.இரண்டு லெப்டொப்கள்(ஒன்று வேலை செய்யாது).

2.மன்னார் மாவட்ட வரைபடம்.

3.பிள்ளைகள் விளையாடும் டெலஸ்கோப்.

4.பேன்ங் புத்தகங்கள்.

5.செக் புத்தகங்கள் ஆகியன .

இப்பொருட்கள் அனைத்தையும் வெள்ளவத்தை பொலிசார் அசாமிடம் ஒப்படைக்காவிட்டால் போலீசாருக்கு எதிராக எமது நடவடிக்கை தொடரும்.

நண்பன் அசாமின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்விடயம் மக்களின் பார்வைக்காக.

சட்டத்தரணி சறூக்.

2 comments:

Powered by Blogger.