August 05, 2019

நிகாபை தடை செய்யாதே - சூடு பிடிக்கும் கோரிக்கை


முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை செய்­வ­தற்குத் துணை­போக வேண்டாம். முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக தற்­போது அமு­லி­லுள்ள சட்­டங்­களைப் பாது­காப்­ப­தற்கு ஒன்­று­ப­டுங்கள் என கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ள­னங்கள் இணைந்து நேற்­றைய தினம் தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வாசலில் நடாத்­திய விசேட மாநாட்டில் கோரிக்கை விடுத்­த­துடன் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் மக­ஜ­ரையும் கைய­ளித்­தன.

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை­செய்­வ­தற்கு சட்­ட­மொன்­றினை இயற்றிக் கொள்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள சமர்ப்­பித்­தி­ருக்­கின்ற நிலையில் அதற்கு எதிர்ப்­புத்­தெ­ரி­விப்­ப­தற்கும், தடை­செய்ய வேண்டாம் எனக் கோரு­வ­தற்­கு­மான கூட்­ட­மொன்று நேற்றுக் காலை தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடை­பெற்­றது.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்கள் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்தக் கூட்­டத்­துக்கு நாடெங்­கி­லு­மி­ருந்து பள்­ளி­வா­சல்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி சுமார் 6000 பேர் கலந்­து­கொண்­டனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் உள்­ளிட்ட பிர­தி­நி­திகள், முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்­டனர். பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­தினால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­பட்­டது.

மக­ஜரில் முஸ்லிம் பெண்­களின் உரி­மை­யான நி­காபை தடை செய்­யக்­கூ­டாது. ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்­பாவி முஸ்­லிம்கள் விரைவில் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும்.

எமது முன்­னைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் வடி­வ­மைத்துத் தரப்­பட்ட முஸ்­லிம்­களின் உரி­மைகள் தொடர்­பான சட்­டங்கள் தொடர்ந்தும் பாது­காக்­கப்­பட வேண்டும். இவற்றைப் பாது­காப்­பதை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது கட­மை­யாகக் கரு­த­வேண்டும் என்றும் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த அமைச்­சர்­க­ளான ரிசாத் பதி­யுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் உட்­பட ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நி­காபை தடை செய்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் கொண்டு வரப்­பட்டால் அதனை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தனர்.

நிகழ்வில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி, பிர­தி­ய­மைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், இம்ரான் மஹ்ரூப், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மேல்மாகாண அளுநர் எம்.ஜே.எம்.முஸம்மில், முன்னாள் ஆளுநர் அசாத்சாலி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இம்மாநாட்டில் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபியும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

7 கருத்துரைகள்:

நிகாபை வீட்டுக்குள் மட்டும் அணிய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும்

Compare this issue of Niqab with wider community interest of Islam and Muslim community in Sri Lanka...of course giving up our fundamental right is not good at all.. It is freedom of Muslim ladies what to wear .No government should interfere in personal freedom.. This is ideal one and yet, so many European countries too have Niqab ban as in France. so, we should think what we could do and what we can not do,, I'm not tell you not to fight for this right but see the viable means as well. Islam is more broader than this Niqab issues. Allah has given us alternative mechanism in all conditions. Niqab is not an obligation.. Scarf.. Covering head is an obligation. So many Muslim ladies now prefer not wear Niqab but prefer head covering. Use your common sense. Allah will not ask you beyond your limit and capacity.. do not create more fitna because of this issue.. compare this issue with wider community interest and its welfare.... Do not bend to fanatical ideas of some groups. Islam is more than that.. It is not interest of one group important but long term welfare of Muslim community in SL.

நிகாபை தடைசெய்ய கூடாது அதட்கு எதிராக போராட்டம் செய்யவேண்டும்.நாங்கள் எங்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்தல் இனிவரும் காலங்களில் ஒவ்வொன்றாக விட்டுக்கொடுக்க வேண்டியாது தான்.

அல்லாஹு அக்பர், மார்க்கத்தைப் பாதுகாக்க நன்மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள், அல்லாஹ்வின் வெற்றி உங்கள் அனைவரையும் வந்து சேரட்டும்.

This is not a vise decision,the Sinhalese people will not allow to wear such a dress we don’t have to sacrifice our society because of peace of cloth not obligatory in islam.

இந்த தீவிர நிலைப்பாடு,பெரும்பான்மை மத்தியில் ஒரு சில குடும்பங்கள் வசிக்கும் ஊர்களில் பெரும் சங்கடமாகும். உதாரணமாக தற்போது உயர் தரப் பரீட்சை எழுதும் மாணவிகள் கம்பஹாவில்
ஹிஜாபை அக ற்றியமை.

சிங்கள மக்களின் விருப்பு, வெறுப்புக்காக எம் முஸ்லீம் பெண்களின் கண்ணியமானஆடையை விட்டுக்கொடுக்க முஸ்லீம்கள் ஒன்றும் கோழைகளும், நாட்டை நேசிக்காத நட்டுக்காக பாடுபடாத துரோகிகளும் அல்ல.
எம் உரிமைகளை ஜனனாயக ரீதியாக சட்டரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிப்பது காலத்தின் தேவை என்பதை புரிந்து கொள்வோம்.

சுமார் 10,000 கணக்கான ஈமானிய உள்ளங்கள் ஒன்று கூடிய உரிமைக்கான மாநாடு உரிமையை மீட்டெடடுப்பதற்கான ஒர் அழகிய சிறந்த முன்மாதிரிமிக்க முயற்சி.

இதை ஏற்பாடு செய்த நல்லுல்லங்களுக்கு அல்லாஹ் றஹ்மத் செய்வானாக.

(எங்கள் வீட்டுப் பெண்மணிகள் முகத்திரை அணிவதில்லை எனவே,உரிமைகளை விட்டுக் கொடுத்து சிங்கள மக்களோடு சமாளித்து செல்வோம் என்று போலிக் கோசம் போடும் போலிப் போராளிகளுக்கு,

முகத்திரை அணிந்து வெளியே செல்ல முடியவில்லையே என்று உள்ளத்தால் மனமுடைந்து அல்லாஹ்விடம் அணுதினம் அழுது மன்றாடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான எம் நாட்டின் கண்ணியமிக்க ஈமானிய பெண்மனிகளின் உளக்குமுறல் எவ்வாறு புரியப்போகின்றது???)

Post a Comment