Header Ads



UNP தமது வேட்பாளரைத் தீர்மானித்த பின்னரே, உடன்பாட்டில் கைச்சாத்திடுவோம் - ஹக்கீம்

ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரைத் தீர்மானித்த பின்னரே, கூட்டமைப்பு தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையைத் தீர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். ஓரிரு நாட்களில் மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார். தேர்தலை எதிர்நோக்குவதற்கு மக்களிடையே பிரபல்யமடைந்த, மக்கள் கோருகின்ற சிறந்த வேட்பாளரை முன்நிறுத்த வேண்டும். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியே அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

4 comments:

  1. நரியிடம் நீங்கள்கலும் மாட்டிக் கொள்ளாதீர்கல்.சஜித்தை அறிவிக்காவிட்டால் ரனிலிடம் இருந்து விலகிக் கொள்வது Muslim அரசியல்வாதிகலுக்கு மிகச் சிறந்த வழி.

    ReplyDelete
  2. This guy Hakeem will wait until the postal votes are in. He will then support the candidate who leads in postal votes count.

    ReplyDelete
  3. சஜித்மைத்ரீயின் வலையில் வீழ்ந்து விட்டார் vest

    ReplyDelete

Powered by Blogger.